நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் மனிப்பு கேட்க முடியாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் அதில் நடிகை த்ரிஷா தொடர்பாக தகாத கருத்தை தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு எதிராக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகன் என்று பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர் ஊடகத்திற்கு முன்பு பொது மனிப்பு கேட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் நடிகர் மன்சூர் அலிகான் தொலைப்பேசியில் பேசியுள்ளார், அதில் “ எல்லா ஊடகத்திலும், மன்சூர் அலிகான் மனிப்பு கேட்காவிட்டால் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று வந்துள்ளது. எப்படி என்னிடம் கேட்காமல் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடலாம்? நடிகர் சங்கத்திலிருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. நான் என்ன செத்து போய்விட்டேனா? அல்லது வெளிநாட்டில் இருக்கிறேனா ? என்னிடம் கேட்காமல் சங்கம் எப்படி தானாக முடிவு எடுக்கலாம். நான் இதை அப்படியே விடமாட்டேன் “ என்று அவர் பேசி உள்ளார்.
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை அவர் சந்தித்த போது அவர் பேசியதாவது “ நடிகர் சங்கம் பெரும் தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் வருகிறது. அது தொடர்பாக எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. ஒரு நோட்டீஸ் அனுப்பி இது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும். நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் நேரம் தருகிறேன். மனிப்பு கேட்கும் சாதியா நான் ?. மக்களுக்கு என்னை பற்றி தெரியும். இந்த 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் பதில் அளிக்க வேண்டும். நான் யாரிடமும் மனிப்பு கேட்க மாட்டேன்” என்று அவர் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“