Advertisment

அமெரிக்க நடன நிகழ்ச்சியில் 'மரண மாஸ்' பாடல் - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குழு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
marana mass song petta america's got talent indian team winners

marana mass song petta america's got talent indian team winners

அமெரிக்காவில் பிரபலமான நடன நிகழ்ச்சியில் 'மரண மாஸ்' பாடலுக்கு நடனமாடிய இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

Advertisment

அமெரிக்காவில் மிகப் பிரபலமான நடன நிகழ்ச்சி 'America's Got Talent'. இந்த நடன நிகழ்ச்சியில் பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும். அந்த வீடியோக்கள் அனைத்துமே இணையத்தில் பெரும் வைரலாவது வழக்கமான ஒன்று.

விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வெளிநாட்டு மாணவர்கள் ஹேப்பி டான்ஸ்; வைரல் வீடியோ

இந்த நிகழ்ச்சியில் இந்தியக் குழுவினர், 'பேட்ட' படத்தில் இடம்பெற்ற 'மரண மாஸ்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ இந்தியாவில் தடாலடியாக வைரலானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், த்ரிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். 'பேட்ட' படத்தில் ரஜினிக்கான ஓப்பனிங் பாடலாக 'மரண மாஸ்' அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய நடனக் கலைஞர்களின் நடனத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் அனிருத் இருவருமே பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில். நேற்று நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டது. அதில், இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றிருக்கின்றனர்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்... மணமேடையில் நெகிழ வைத்த மணப்பெண்; வைரல் வீடியோ

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment