Advertisment

மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு : விதிகளை மீறிய ரசிகர்களால் மீண்டும் சர்ச்சை

வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவில் ரசிகர்கள் விதிமுறைகளை மீறியதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு : விதிகளை மீறிய ரசிகர்களால் மீண்டும் சர்ச்சை

மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற இயக்குநர் லோகேஷ் கனராஜ், தற்போது தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மேகனன் நாயகியாக நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி (நாளை மறுநாள்)வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த படத்திற்கான முன்பதி நேற்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பல திரையரங்குகளில், ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், டிக்கெட்டுகள் வாங்குதற்கு ரசிகர்கள் கடும் போராட்டத்தை சந்திக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி வருகிறன்றனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக வெளியில் செல்லும்போது முக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத ரசிகர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருக்கின்றனர். இதில் கோயம்பேட்டில் உள்ள ரோஹினி, கோளத்தூரில் உள்ள கங்கா தியேட்டர் உள்ளிட்ட பல தியேட்டர்களில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க நாள் முழுவதும் காத்திருந்தனர். இதில் சில ரசிகர்கள் அதிகாலை 1 மணியில் இருந்தே டிக்கெட் வாங்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரோஹினி தியேட்டர்களின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா கூறுகையில், மாஸ்டர் படத்தின் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  எங்கள் ஊழியர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாங்கள் கவுண்டரில் முன்பதிவுகளையும் நிறுத்திவிட்டு போலீசாருக்குதகவல் கொடுத்தோம். தற்போது டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராம் சினிமாஸில் டிக்கெட் கவுண்டர்களுக்கு அருகே அளவுக்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏறபட்டது. இதில் ஆண்கள் ஒருவருக்கொருவர் அழுத்திக்கொள்வதையும், விதிமுறைகளை மீறி அனைவரும் முக்கவசம் அணியாமல் இருப்பதையும் காண முடிந்தது. அடுத்தடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்கள் விதிமுறையை மீறி நடந்துகொள்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகும் போது தியேட்டரில் 100%  இருக்கைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சகமும், சென்னை உயர்நீதிமன்றமும் இந்த அரசாணைக்கு எதிராக கருத்து தெரிவித்த்தை தொடர்ந்து 100% இருக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், 50% பார்வையாளருக்கு கூட கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுநர்கள், தெரிவித்துள்ளனர். ஏனெனில் மூடிய இடங்களில் காற்று தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்படுவதால். புதிய காற்று மற்றும் சூரிய ஒளி குறைந்த அளவே உள்ளே செல்லும் இதனால் நோய் தொற்று அபாயம் அதிகம் என கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Master Ticket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment