Advertisment

சினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
me too vairamuthu, பாலியல் குற்றச்சாட்டு

சினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

மி டூ... கடந்த சில நாட்களாகவே இந்திய மக்களை நிலைகுலையச் செய்த வார்த்தை. பாலியல் குற்றச்சாட்டு குறித்து வீசும் இந்த மி டூ புயல் பலரின் வாழ்க்கையில் இருக்கும் புழுதியை கிளறி வருகிறது.

Advertisment

அமெரிக்காவில் கடந்த ஆண்டு தொடங்கிய மாபெரும் பிரச்சாரம் தான் இந்த மி டூ. அனைத்துப் பாலினத்தை சேர்ந்தவர்களும் me too என்ற ஹாஷ்டாக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

#MeToo விவகாரம், பாலியல் குற்றச்சாட்டு #metoo

இந்த வார்த்தையைக் கொண்டு பலரும் தங்களுக்கு நிகழ்ந்ததைப் பகிர்ந்துகொண்டதை படித்து உலகமே ஒரு நிமிடம் ஆடிப்போனது. இதுவரை மௌனம் காத்தவர்கள் அனைவரும் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை படித்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு வகையில் இந்த வார்த்தை அமெரிக்காவில் மாபெரும் சமூக வலைத்தள புரட்சியையே உண்டாக்கியது.

இந்தியாவிற்கு காலடி பதித்த மி டூ பாலியல் குற்றச்சாட்டு :

இந்த அதிர்வலைகள் தற்போது இந்தியாவையும் தொற்றிக்கொண்டுள்ளது. சமீபத்தில் பெண்கள் பலரும் தங்களின் சமூக வலைத்தளத்தில் மி டூ என்று தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிரபல பாஜக அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதும் இந்தக் குற்றச்சாட்டு பாய்ந்தது.

தமிழகத்திலும் இது போன்ற குற்றச்சாட்டு மாபெரும் மலைபோல் குவிந்து வருகிறது. குறிப்பாகச் சினிமா துறையில், பாடகி சின்மயி தொடங்கி வைத்த குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்து வருகிறார் வைரமுத்து. அதாவது வைரமுத்துவால் பாலியல் தொல்லைகளை அனுமவித்த பெண்கள் சின்மயிடம் புகார் தெரிவிக்க, அவை அனைத்தையும் பெயர் குறிப்பிடாமல் டுவிட்டரில் வெளியிட்டார் சின்மயி.

October 2018

இதில் அவர் குறிப்பிடும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீதே குவிந்துள்ளது. வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்து டுவிட்டரில் ஒரு பதிவிட்டார். ஆனால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “பொய்” என்று ஒரே வார்த்தையில் முடித்தார் சின்மயி.

October 2018

வைரமுத்துவின் மறுப்புக்கு பின்பும் குற்றச்சாட்டுகளின் குவியல் ஓய்ந்தபாடில்லை. ஆகையால் வீடியோ மூலம் மீண்டும் ஒரு மறுப்பு தெரிவித்தார் வைரமுத்து. சின்மயியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ் திரையுலகில் கரம் கோர்த்தவர்கள் குறைவே.

chinmayi sripaada, Singer Chinmayi Accuses Kavignar Vairamuthu, கவிஞர் வைரமுத்து, கவிப் பேரரசு வைரமுத்து, பாடகி சின்மயி, பாலியல் குற்றச்சாட்டு

சின்மயிக்கு எதிராக திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவிக்க தயங்கி வருகின்றனர். அவர்களின் இந்தத் தயக்கத்திற்கு வைரமுத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பலமே காரணம் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சின்மயி பேட்டியளித்திருந்தார். ஆதரவாக இருக்க வேண்டிய திரையுலகினரே சின்மயிக்கு ஆதரிக்க மறுப்பதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவை பார்த்து தமிழக சினிமா துறை கற்றுக்கொள்ள வேண்டுயது என்ன ?

ஆனால் இது போன்ற பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கு முன்னோடியாக இருந்தது கேரளா. பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்துப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தன் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் அந்தக் குற்றத்தை நிகழ்த்தியது மலையாள நடிகர் திலீப் என்றும் நிரூபணமானது. இது தொடர்பான வழக்கில் அவர் சிறையை விட்டு வெளியே வந்திருந்தாலும், திலீப் கூறுவது போல அவர் நிரபராதி என்று தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

பாலியல் குற்றச்சாட்டு

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக திலீப் இருந்து வந்தாலும், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர் மலையாள நடிகர்கள் மற்றும் நடிகைகள். கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவாக, நடிகை ரேவதி, மஞ்சு வாரியர், ரம்யா நம்பீசன், ரீஷ்மா, பார்வதி உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். குறிப்பாக பெங்களூரூ நாட்கள் படத்தை எடுத்த இயக்குநர் அஞ்சலி மேனன் மிகுந்த ஆதரவை அளித்து வந்தார்.

திலீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர், மலையாள திரையுலக நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ சங்கம், திலீப்பை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது. நடிகர்கள் அல்லது நடிகைகள் எவ்வித குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையாள ‘அம்மா’ சங்கம் குரல் கொடுத்தது.

இந்தப் பிரச்சனை இத்துடன் அடங்கியதா? அம்மா சங்கத்தின் முன்னாள் தலைவர் இன்னசெண்ட் மறைவுக்குப் பிறகு, அப்பதவிக்கு மோகன் லால் தேர்வானார். பதவியேற்ற பிறகு, திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதற்கு இணங்க மறுத்த நடிகைகள், திலீப்பை மீண்டும் சேர்த்தால் அனைவரும் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்குவோம் என்று எதிர்ப்புகளை எழுப்பினர்.

’அம்மா’வில் நடிகர் திலீப் வருகையை எதிர்த்து பிரபல நடிகைகள் விலகல்!

பின்பு, பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீட்டிய ஆதரவு போராட்டத்தில் அவர்கள் வெற்றியும் அடைந்தனர். பாலியல் குற்றச்சாட்டின் வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபித்துத் தீர்ப்பு வரும் வரை அம்மா சங்கத்தில் இணைய மாட்டேன் என்றும், தமக்கு ஆதரவு அளித்த மோகன் லால் அண்ணனுக்கு நன்றி என்றும் திலீப் கடிதம் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டு :கேரளாவில் நடந்தது போன்ற மாற்றம் தமிழ் திரையுலகில் நடக்குமா?

குற்றம் இழைப்பது பிரபலமாக இருந்தாலும் ஞாயத்தின் பக்கமே நிற்க வேண்டும், நீதி ஒருபோதும் தோற்றுவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தனர் மலையாள நடிகைகள். ஆனால் தமிழ் திரையுலகில் நடப்பது என்ன? சினிமா துறையில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது கேள்விக்குறியாக்கவே உள்ளது.

சினிமா துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் மீது கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. மலையாள நடிகைக்காக ஆதரவு அளித்த நடிகை ரேவதி, சின்மயி புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. சின்மயிக்கு ஆதரவாக சமந்தா, சரத்குமார் உட்பட சிலரே ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வைரமுத்துவுக்கு எதிராகப் பேச, பலரும் தயங்கி வருகின்றனர் என்பது வெளிப்படையாகத் தென்படும் உண்மை.

சினிமாத் துறையில் உள்ள நடிகர்களுக்கு பாலியல் துபுறுத்தல்கள் நேர்ந்தால், அந்தப் புகாரை உடனே தெரிவிக்குமாறும், குறிப்பிடப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பரும், அனைத்து நடிகைகளுக்கும் பாதுகாப்பான சூழல் உருவாக்கித் தரப்படும் என்று நடிகர் விஷால் நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிட்டார்.

அறிக்கை வெளியிட்டதுடன் நடிகர் சங்கம் மௌனம் காத்து தான் வருகிறது. வைரமுத்து உட்பட பிற சினிமா பிரபலங்கள் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து எந்த ஒரு விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

ஆதாரங்களை மட்டுமே தேடி வரும் திரையுலகினர் ஒரு புறம், ‘நீ பாத்தியா?’ என்று கேள்வி எழுப்பும் பாரதிராஜா போன்ற பிரபலங்கள் ஒரு புறம் என்று இது வெறும் விவாதமாக மட்டுமே மாறியுள்ளது. ‘4 நாள் ஆச்சுனா இதுவும் அடங்கிப் போகும்’ என்று கேலி பேச்சில் ஈடுபடும் ராதாரவி போன்றவர்களுக்கு என்ன பதில் கொடுக்கப் போகிறது தமிழ்நாடு நடிகர் சங்கம்.

மி டூ-வில் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் வெறும் குமுறல்களாக மட்டுமே ஓய்ந்து விடுமா? கேரளாவின் துணிச்சல் தமிழ் திரையுலகிற்கு எப்போது வரப்போகிறது?

Kerala Nadigar Sangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment