Advertisment

நடிகை மீனா கணவர் வித்யாசாகர் மரணம்; திரை உலகினர் இரங்கல்

நடிகை மினாவின் கணவர் உடல்நலகுறைவால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
நடிகை மீனா கணவர் வித்யாசாகர் மரணம்; திரை உலகினர் இரங்கல்

நடிகை மினாவின் கணவர் உடல்நலகுறைவால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக `தெறி’ `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. நுரையீரல் செயலழிந்த நிலையில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், தானமாக உறுப்புகள் கிடைக்காமல் போக, அவரின் நிலை மோசமடைந்து வந்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் , அவருக்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment