செப்.,21-ல் மெர்சல் டீசர் வெளியீடு

இளைய தளபதி விஜய் - இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாய் வரும் மெர்சல் படத்தின் டீசர் வருகிற 21-ம் தேதியன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இளைய தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாய் வரும் மெர்சல் படத்தின் டீசர் வருகிற 21-ம் தேதியன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தெறி படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாக்கி வரும் படம் மெர்சல். இந்த படத்தில், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. தேனாண்டாள் பிலிம்ஸுக்கு இப்படம் 100-வது படமாகும்.

தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியாகி ஹிட் அடித்தது. இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதனிடையே, மெர்சல் பட டீஸர் பீவர் அதிகமாகியது. படக்குழுவும் விரைவில் டீஸர் வெளியாகும் என கூறி வந்தனர். ஆனால், எப்போது என்று கூறாததால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், மெர்சல் படத்தின் தீசர் குறித் அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் “மெர்சல் டீசர்” #MersalTeaser ட்ரெண்டானது. தொடர்ந்து, மெர்சல் படத்தின் டீசர் வருகிற 21-ம் தேதியன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது, அந்த தேதியை குறிப்பிட்டு #MersalTeaserFrom21stSep சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

×Close
×Close