Advertisment

எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள்: இன்றைய தலைமுறைக்கும் நம்பிக்கைச் சுடரேற்றும்

எதிர்காலம் எனும் நம்பிக்கை சுடரை ஒளிரச் செய்யும் வகையில் எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் அமைந்திருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR Songs

MGR Songs

MGR Death Anniversary : திரைத்துறையில் அறிமுகமாகி அரசியலில் புகுந்து தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவர் அரசியலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க, அவரது படங்களும் அதில் இடம்பெற்றிருந்த பாடல்களுமே முக்கியக் காரணம் எனலாம். வாழ்க்கையின் இன்ப - துன்பம், மகிழ்ச்சி - துக்கம் உள்ளிட்ட வாழ்க்கையின் மொத்த தத்துவங்களையும் எம்.ஜி.ஆரின் பாடல்களின் உணரலாம். அப்படியான சில குறிப்பிட்ட பாடல்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசை முகம் (1965)

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளில் டி.எம்.செளந்தரராஜன் பாடிய இந்தப் பாடல், மனிதர்களின் மன ஓட்டத்தை எடுத்துக் கூறுகிறது.

கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன் (1975)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், ஏ.மருதகாசியின் வரிகளில் டி.எம்.செளந்தரராஜன் பாடிய இப்பாடல், மேலோட்டமாக எதையும் நம்பி விடக்கூடாது என்பதை உணர்த்தும்.

நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப் பிள்ளை (1966)

இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. காரணம் எம்.ஜி.ஆர் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இந்தப் பாடல் தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வாலியின் வரிகளுக்கு, குரல் கொடுத்திருக்கிறார் டி.எம்.செளந்தரராஜன்.

நாளை நமதே - நாளை நமதே (1975)

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துவண்டு போனாலும், எதிர்காலம் எனும் நம்பிக்கை சுடரை ஒளிரச் செய்யும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கும்.

கடவுள் ஏன் கல்லானார் - என் அண்ணன் (1970)

கே.வி.மகாதேவன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலை டி.எம்.செளந்தரராஜன் பாடியிருந்தார். கல் மனம் கொண்ட மனிதர்களால் தான் கடவுளும் கல்லாக இருக்கிறார் என இந்தப் பாடல் கூறுகிறது.

ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க (1975)

கே.வி.மகாதேவனின் இசையில், புலமைப்பித்தன் வரிகளில் ஏசுதாஸ் பாடிய இப்பாடல், மனித ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை கூறியிருக்கும். இப்படி நூற்றுக் கணக்கான எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மேம்பட்ட வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment