Advertisment

மலையாளப் படத்தில் நடிக்கும் மியா கலிஃபா : சன்னி லியோனுக்குப் போட்டியா?

ஆபாசப் படங்கள் மூலம் புகழ்பெற்ற மியா கலிஃபா, மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
மலையாளப் படத்தில் நடிக்கும் மியா கலிஃபா : சன்னி லியோனுக்குப் போட்டியா?

ஆபாசப் படங்கள் மூலம் புகழ்பெற்ற மியா கலிஃபா, மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.

Advertisment

லெபனானில் பிறந்த மியா கலிஃபா, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். 24 வயதான இவர், ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்திருக்கிறார். அதனால், உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு இவரை நன்றாகவே தெரியும். ஆனால், தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மாடலாக இருக்கிறார்.

மியா கலிஃபாவை, மலையாளத்தில் தயாராக இருக்கும் ‘ச்சங்க்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவைக்க இருக்கின்றனர். இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். கதையைக் கேட்டு மியாவும் ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள். அடுத்த வருடம் மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஒமர் லுலு இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான மலையாளப் படம் ‘ச்சங்க்ஸ்’. ஹனி ரோஸ் ஹீரோயினாக நடித்த இந்தப் படம், அடல்ட் காமெடி வகையைச் சேர்ந்தது. 2 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். ஒமர் லுலு இயக்கத்தில், ஹனி ரோஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மியா கலிஃபா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதேபோல் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகையான சன்னி லியோன், இந்திய சினிமாவில் ஒரு பாடலுக்கு ஆடி முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். தமிழில் கூட ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். எனவே, இவருக்கு ஏற்ற சரியான போட்டியாக மியா கலிஃபா இருப்பார் என்று கூறப்படுகிறது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment