'பாகுபலி 2' படத்தைப் பார்த்த போது, நம்ம தமிழ் பிரபலங்கள் சிலருக்கு, அவர்கள் மனதில் இப்படிப்பட்ட மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம். யார் கண்டா....!
கமல்ஹாசன்:
பாகுபலி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் "ம்ஹூம்.... இதெல்லாம் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்க வேண்டியது. என்னோட 'மருதநாயகம்' மட்டும் வந்து இருந்ததுனா.... என்ன பண்றது! ம்ம்ம்... எல்லாம் நேரம்....!
விஜய்:
"நல்லவேளை நம்ம 'புலி' படம் பாகுபலி 2-க்கு அப்புறம் வரல. இல்லனா பாகுபலி 2-வை மிஞ்சிய பிரம்மாண்ட காவியம்-னு பப்ளிசிட்டி பண்ணியிருப்பானுங்க... தப்பிச்சேன்...! ஆனா, கிராஃபிக்ஸ்-ல புலியே தேவலை போல....
விஷ்ணுவர்தன்:
"போங்கடா டே...நான் மட்டும் சோழ மன்னனின் கதையை தல-யை வைத்து எடுத்து முடிச்சிட்டேன்னு வை, அப்புறம் பாருங்க டா...சான்ஸ்லஸ்....மியூசிக் யுவன் தான். ஆனா, பாகுபலி பிரம்மாண்டத்தை தாண்டிட முடியுமா!?? என்ன பண்றது!!?
ரஜினிகாந்த்:
சே... இந்த "ராணா" படம் பண்ண முடியாம போச்சே.... இனிமேல் நம்மால் அதை பண்ண முடியுமா? ரவிக்குமார் வேற 'லிங்கா'வை ஃபிளாப் ஆக்கிட்டாரு... பண்ணுனா ஷங்கரை வச்சுத் தான் பண்ணனும். ஆனா, என் உடம்பு...! வேண்டாம் சிவாஜி ராவ்....(மனசாட்சி). அதுக்கு சிம்பிளா, 'ஸ்டைலா, சும்மா கெத்தா' ரஞ்சித்தை வச்சு மூணு படத்தில் நடிச்சு முடிச்சிடலாம்... எதுக்கு உடம்போட ரிஸ்க் எடுத்துக்கிட்டு...
'சிறுத்தை' சிவா:
எப்படியாவது ஒரு பீரியட்ஸ் கதை ரெடி பண்ணி, 'தல' கிட்டயே அடுத்து படத்துக்கும் கால்ஷீட் வாங்கிடணும். 'தல'ய வச்சு நாலாவது படமும் எடுத்திடணும். ஆனா, அதுக்கு முதல்ல கதை வேணுமே...!
ராதிகா:
ரம்யா கிருஷ்ணின் சிவகாமி தேவி பாத்திரத்தை பார்த்தபின், (உள்ளுக்குள் சிரிப்புடன்) நல்லவேளை... ஸ்ரீதேவி இந்த கேரக்டரில் நடிக்கல... என்னம்மா நடிச்சிருக்கு இந்த ரம்யா... பட்! நாம கூட இந்த கேரக்டரை பண்ணியிருக்க முடியும்ல.. ப்ச்... என்ன பண்றது! நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலையே...
தனுஷ்:
சல்லடை போட்டுத் தேடினாலும், இதுல நடிச்சிருக்குற ஒரு கேரக்டருக்குக் கூட நாம மாற்றா வர முடியாது போலிருக்கே! சே...
ராணா (பல்வாள்தேவன்):
பிரபாஸை புகழ்றவன்-ல பாதி பேர் கூட நம்மள கண்டுக்க மாட்டேங்குறாய்ங்க..... படத்தில தான் பாகுபலிக்கு அங்கீகாரம்-னா, நெஜத்துலையும் இவனுக்கே எல்லா புகழும் போகுதே... நானும் உடம்ப முறுக்கி கஷ்டப்பட்டுத் தானே நடிச்சேன்...!