Advertisment

கலை நிகழ்ச்சியில் மேடை ஏறி மாணவிகளுடன் மாஸ் டான்ஸ் போட்ட அமைச்சர் ரோஜா… வீடியோ வைரல்

திருப்பதியில் கலாச்சாரத்தை மேம்படுத்த நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச அமைச்சர், நடிகை ரோஜா மேடை ஏறி மாணவிகளுடன் மாஸாக நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார். ரோஜா நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கலை நிகழ்ச்சியில் மேடை ஏறி மாணவிகளுடன் மாஸ் டான்ஸ் போட்ட அமைச்சர் ரோஜா… வீடியோ வைரல்

திருப்பதியில் கலாச்சாரத்தை மேம்படுத்த நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச அமைச்சர், நடிகை ரோஜா மேடை ஏறி மாணவிகளுடன் மாஸாக நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார். ரோஜா நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே. செல்வமணியைத் திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் இருந்து விலகிய ரோஜா ஆந்திரப் பிரதேச அரசியலில் குதித்தார். சந்திராபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில், சிம்ம சொப்பனமாக இருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசில், நடிகை ரோஜா சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில், திருப்பதியில் கலாச்சாரத்தை மேம்படுத்த நடைபெற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரம், இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, கலைநிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் நடனம் ஆடிய மாணவிகள் அமைச்சர் ரோஜாவை நடனம் ஆட அழைத்ததை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரோஜா மேடையில் ஏறி மாணவிகளுடன் நடனம் ஆடி அசத்தினார். அமைச்சர் ரோஜா மேடையில், மாணவிகளுடன் மாஸாக நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரசியலில் களம் இறங்கி அமைச்சரானாலும் நடிகை ரோஜா, மாணவிகளுடன் ஆடிய நடனத்தைப் பார்ப்பவர்களுக்கு அவர் இன்னும் நடனத்தை விட்டுவிடவில்லை என்று உணர்த்துவது போல இருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Video Roja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment