Monster Review: சுவாரசியமான அசுரன்

Monster Review In Tamil: சூர்யா, எலியைக் கொன்றாரா? பிரியா பவானி சங்கருடன் திருமணம் நடந்ததா? என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலமாக கூறியிருக்கிறார், இயக்குனர்...

Monster Full movie Review: மான்ஸ்டர் என்றால், தமிழில் ‘அசுரன்’ என்று பொருள். எனவே கோரமான அழுக்கு மிகுந்த ஒரு வில்லனை எதிர்பார்த்து படத்திற்கு செல்ல வேண்டாம். வீட்டுக்குள் புகுந்து சேட்டை செய்யும் ஒரு எலியின் பெயர்தான், ‘மான்ஸ்டர்’.

படத்தின் ஹீரோ என்னவோ எஸ்.ஜே.சூர்யாதான் என்றாலும், படம் முழுக்க அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது அந்த ‘மான்ஸ்டர்’ எலிதான். எஸ்.ஜே.சூர்யா வழக்கமான தனது ‘ஏ’ முத்திரையில் இருந்து மீண்டு, கதைக்காக நடித்திருப்பதற்கு சபாஷ் சொல்லலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக வேலை பார்க்கும் இளைஞர் அஞ்சனம் அழகிய பிள்ளையாக எஸ்.ஜே.சூர்யா வருகிறார். முப்பது வயதைக் கடந்த இளைஞர். திருமணம் செய்து வைக்க எவ்வளவோ முயற்சிகளை வீட்டில் எடுக்கிறார்கள். சில பல காரணங்களால் அது தள்ளிப் போகிறது.

Monster Full movie Review, Monster Tamil movie Review, Monster movie

Monster movie rating: மான்ஸ்டர் படம் எப்படி?

Monster Review In Tamil: மான்ஸ்டர் விமர்சனம்

சொந்தமாக வீடு வாங்கினால் திருமணம் நடக்கும் என்கிற நம்பிக்கையில், சென்னை வேளச்சேரியில் வீடு வாங்குகிறார். அங்கு புகுந்த மான்ஸ்டர் எலி செய்யும் அதகளம்தான் படத்தின் உயிர் நாடி.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என உபதேசித்த ராமலிங்க வள்ளலாரால் ஈர்க்கப்பட்டவர் சூர்யா. அதனால் அந்த எலியைக் கொல்லவும் அவருக்கு விருப்பம் இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பிரியா பவானி சங்கரின் ஆசைக்காக வாங்கிய சோபா செட்டையும் அந்த எலி துண்டு துண்டாக பதம் பார்த்துவிட, அதைக் கொல்லவும் துணிகிறார் சூர்யா. எலியைக் கொன்றாரா? பிரியா பவானி சங்கருடன் திருமணம் நடந்ததா? என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலமாக கூறியிருக்கிறார், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

தமிழில் ஏற்கனவே முரளி, ராதா நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் இதேபோல எலியின் அதகளத்தை சொன்னது. அதில் வடிவேலும் எலியுடன் இணைந்து கலக்கினார். அதில் நகைச்சுவை டிராக்கில் மட்டும் இணைந்திருந்த எலி, மான்ஸ்டரில் கதையோட்டத்துடன் முழுமையாக வருகிறது.

நிஜமான எலியையே படம் முழுக்க இப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம் தரும் செய்தி. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. பிரியா பவானி சங்கருக்கு அதிக வேலை இல்லை. அழகான குடும்பத்து பெண்ணாக வந்து போகிறார்.

மான்ஸ்டர் படம் – இந்தாண்டின் சிறந்த எண்டர்டெய்னர் : டுவிட்டர்வாசிகளின் கருத்துகள்

கருணாகரன், காமெடிக்காக இல்லாமல் குணசித்திர கதாபாத்திரமாக வந்து போகிறார். கிளைக் கதையாக வரும் வைரக் கடத்தல் சமாச்சாரங்கள் படத்திற்கு அவசியமே இல்லை. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

எல்லாவற்றையும் தாண்டி ஒரு எலியை வைத்து நெல்சன் வெங்கடேசன் கதை சொன்ன விதத்திற்காகவும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்காகவும் மான்ஸ்டரை தைரியமாக சென்று பார்க்கலாம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close