ஒரு காலத்துல நானும் அழகு தான் என வில்லனாக இருந்து காமெடி நடிகராக மாறிய மொட்டை ராஜேந்திரன் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக, வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் ராஜேந்திரன். இவர் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, டர்லிங் ஆகிய படங்களில் இவரின் நடிப்புக்கு சிரிக்காதவர்கள் யாருமே கிடையாது.
மொட்டை ராஜேந்திரன் டுவிட்டர் பதிவு
இவரது தலையில் சுத்தமாக முடி இல்லாததால் இவருக்கு மொட்டை ராஜேந்திரன் என்பதே பெயரானது. அதுவே இவருக்கு ஒரு அடையாளத்தையும் தேடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், ராஜேந்திரன் நல்ல அடர்த்தியான முடியுடன் இருக்கும் போது அரவிந்த் சாமியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ஒரு காலத்தில நானும் அழகு தான். என்ன நான் சொல்றது என பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் நானும் அழகு
தான் நண்பா என்ன நா சொல்றது pic.twitter.com/jOFDSbPKqM— Motta Rajendran (@Motta_Rajendran) 27 February 2019
இவரது இந்த போட்டோவை பார்த்த பலரும் ஆச்சரியமாக இவரை பார்த்து வருகின்றனர். மேலும் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.