Advertisment

பட தலைப்பை மாற்றிய பிரபல இயக்குநர், அமிதாப், ஷாருக் கான் பட அப்டேட்ஸ்.. மேலும் சுவாரசியமான சினிமா செய்திகள் உள்ளே…

இது கிராமம் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக இருப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுமாறு நண்பர்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
பட தலைப்பை மாற்றிய பிரபல இயக்குநர், அமிதாப், ஷாருக் கான் பட அப்டேட்ஸ்.. மேலும் சுவாரசியமான சினிமா செய்திகள் உள்ளே…

நண்பர்கள் கூறியதால் படத்தின் தலைப்பை

Advertisment

மாற்றிய பிரபல இயக்குநர்

பாண்டிய நாடு, பாயும் புலி, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

இவர் நடிகர் ஜெய்யை கதாநாயகனாக வைத்து சிவ சிவா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை நண்பர்களுக்கு அண்மையில் திரையிட்டுக் காண்பித்துள்ளார்.

இது கிராமம் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக இருப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுமாறு நண்பர்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

அதை பரிசீலித்து அவர்கள் சொல்வது சரிதான் என்பதை ஒப்புக்கொண்டு படத்தின் தலைப்பை வீரபாண்டியபுரம் என்று மாற்றியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

இந்தத் தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

3, 2022

நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு

புதிய படத்தின் முன்னோட்டம் வெளியீடு

மாநாடு, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சிலம்பரசனின் பிறந்த நாளை (பிப்.3) முன்னிட்டு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை கைவசம் வைத்திருந்த சிம்பு, பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சிலம்பரசனின் பிறந்த தினத்தையொட்டி பத்து தல படத்தின் டீசரை படத் தயாரிப்பு நிறுவனம் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளது.

ஓ.என். கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தை பார்ப்பதன் மூலம் தெரிய வருகிறது.

சிம்பு பிறந்த தினத்தில் வெளியாகியுள்ள புதுப் படத்தின் முன்னோட்டம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/StudioGreen2

‘டிரைலரை பார்த்தாலே படம் நல்லா இருக்கும் போல தோணுது’

நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படம் மகான். இந்தப் படம் பிப்ரவரி 10-ஆம் தேதி அமேஸான் தளத்தில் வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் அமேஸான் பிரைம் யூ-டியூப் சேனலில் வெளியானது.

தந்தை-மகனாகவே படத்திலும் நடித்துள்ளனர் என்பது டிரைலரை பார்க்கும்போது தெரிய வருகிறது.

பேட்ட, இறைவி, பீட்சா உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தில் என்ன மாதிரியான கதையை கையாண்டிருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டு வருகிறது.

படத்தின் டிரைலரே பார்த்தாலே படம் நல்லா இருக்கும்போல தோணுது என்று ரசிகர்கள் கமென்ட்டில் தெரிவித்துள்ளனர்.

டிரைலரைக் காண லிங்க் இதோ…

https://www.youtube.com/watch?v=i4ORfM-q35Y

ஷாருக் கானை இயக்கப்போகும் பிரபல இயக்குநர்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான், சித்தார்த் ஆனந்த் இயக்கிவரும் பதான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு, 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை டாப்ஸியை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

நடிகர் அமீர் கானை வைத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கிய பிகே, 3 இடியட்ஸ் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது. அத்துடன் வசூல் ரீதியிலும் சாதனைகள் படைத்தது.

இவருடன் ஷாருக் கான் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. அது நிறைவேறப் போகிறதா என்பது விரைவில் தெரிய வரும்.

ஸ்போர்ட்ஸ் படத்தில் அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அபிதாப் பச்சன் ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜுந்த் என்ற தலைப்பில் தயாராகியுள்ள அந்தப் படம் வெளியாகும் தேதியை அவர் இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படம் மார்ச் 4-ஆம் தேதி வெளியாகும் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் போஸ்டரை அவர் ஷேர் செய்து, இந்தக் குழுவுடன் சண்டை போட தயாராக இருங்கள். எங்கள் டீம் வந்துகொண்டே இருக்கிறது என்று அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் போஸ்டரில் கால்பந்தை கையில் வைத்துக் கொண்டு ஸ்டைலான தோற்றத்தில் இருக்கிறார் அமிதாப்.

target="_blank" rel="noreferrer noopener">,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Bollywood Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment