6 மாதமா போட்ட டியூன், 60 வருஷமா ஹிட் லிஸ்டில் இருக்கும் பாட்டு; எம்.எஸ்.வியின் இந்த பாடல் தெரியுமா?

ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் ஆறு மாதமாக டியூன் போட்டுள்ளார். அது என்ன பாடல் என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் ஆறு மாதமாக டியூன் போட்டுள்ளார். அது என்ன பாடல் என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
msv

கடந்த 1963-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காவியம் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம். இப்படத்தில், கல்யாண் குமார், எம்.என் நம்பியார், நாகேஷ், தேவிகா, மனோரமா என ப்ல திறமையான நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு விஸ்வநாதன் - ராம மூர்த்தி இசையமைத்தனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த பாடல்களை இன்று கேட்டாலும் நமது மனது லேசாகிவிடும். அப்படி இருக்கும் இதன் இசையும், பாடல் வரிகளும்.

Advertisment

கதைக்களம்

ஜமீன்தாரின் மகன்  ஜமீனில் வேலை செய்யும் ஒரு சாதாரண பணியாள் மகளான தேவிகாவை காதலிக்கிறார். இவர்களை எந்த ஜென்மத்திலும் சேரவிடமாட்டேன் என்று ஜமீன்தார் எம். என். நம்பியார் சபதமெடுக்கிறார் . இதனிடையே நாகேஷ் - மனோரமா ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அப்போது  தேவிகாவை நாகேஷுக்கு திருமணம் செய்து வைக்க ஜமீன் முயற்சி செய்கிறார். இதை அறிந்த கல்யாண் குமார், தேவிகாவை தப்பிக்க வைக்கிறார். 

nenjam marappathillai

இதனால் ஆத்திரமடைந்த ஜமீன், தேவிகாவை சுட்டு வீழ்த்துகிறார். இப்படி ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்துடன் கதைக்களம் செல்லும். பூவர் ஜென்மத்தில் இணையாத காதல் ஜோடிகள் இந்த ஜென்மத்தில் இணைகிறார்களா என்பது தான் படத்தின் கதைக்களம். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் இன்று வரை அனைவரும் விரும்பும் காதல் பாடலாக உள்ளது. 

இந்நிலையில், இந்த பாடல் எழுதும் போது எம்.எஸ்.விஸ்வநாதன் சந்தித்த இன்னல்கள் குறித்து இயக்குநர் மிஷ்கின் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக இயக்குநர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் ஒரு பாடலைக் கேட்கிறார். எம்.எஸ்.வி ஒரு மெட்டை கம்போஸ் செய்கிறார் ஆனால் அந்த மெட்டுக்கு ஏற்ற சூழ்நிலை அமையவில்லை.  ஆறு மாதங்கள் உழைத்தும் அந்த பாடல் பண்ண முடியவில்லை.

Advertisment
Advertisements

பின்னர், கவிஞர் கண்ணதாசனிடம் சென்று இந்த சூழ்நிலையை விளக்கியபோது, அவர் "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடலை எழுதினார். இந்தப் பாடலைக் கேட்கும்போது, அது மூன்று தலைமுறைகளின் வரலாற்றை உணர்த்தும். கடந்த காலம், இப்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை உணர்த்தும்” என்றார்.

பாடகி சுசீலாவின் காந்த குரலில் ஒலித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடலுக்காக  எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் இணைந்து உழைத்தது வீண் போகவில்லை. இன்று வரையிலும் மக்களை சுண்டி இழுக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. மாபெரும் வெற்றி படமாக அமைந்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் 60 ஆண்டுகளை கடந்த பின்பும் மறக்க வாய்ப்பேயில்லை என்ற கர்வத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.  

Kannadasan msv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: