Advertisment

'அடுத்து யாரிடம் கையேந்தலாம் என யோசியுங்கள்' சினிமா விமர்சகரை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர்

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தை மோசமாக விமசித்த இட்டிஷ் பிரசாந்த்துக்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் ஸ்ரீஜர், இட்டிஷ் பிரசாந்த் சினிமாவில் உங்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது அது ‘Paid Reviewer Prashanth’ என்று கூறி சாடியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Murungaikkai Chips movie, director Srijar slams youtuber reviewer Pashanth, reviewer Pashanth bad comments, முருங்கைக்காய் சிப்ஸ், இயக்குனர் ஸ்ரீஜர், நடிகர் சாந்தனு, பாக்கியராஜ், அதுல்யா ரவி, ரிவியூவர் பிரசாந்த், Shanthanu, Athulya Ravi, Bakyaraj, Tamil cinema, Murungaikkai Chips

நடிகர் சாந்தனு நடித்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' படம் குறித்து மோசமாக விமர்சனம் செய்த யூடியூபர் இட்டிஷ் பிரஷாந்தை பதிலுக்கு கடுமையாக விமர்சித்துள்ள இயக்குனர் ஸ்ரீஜர், அடுத்து யாரிடம் கையேந்தலாம் என யோசியுங்கள் என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Advertisment

இயக்குனர் பாக்கியராஜின் மகன் நடிகர் சாந்தனு, நடிகை அதுல்யா ரவி நடிப்பில் உருவான ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தனது மகன் சாந்தனுவுடன் இயக்குனர் பாக்கியராஜும் நடித்துள்ளார். அடல்ட் காமெடி படமான (வயது வந்தோர் நகைச்சுவை) ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தை இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் குறித்து யூடியூபர் ரிவியூவர் இட்டிஷ் பிரஷாந்த் யூடியூபில் மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் குறித்து இட்டிஷ் பிரசாந்த்தின் மோசமான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் ஸ்ரீஜர், இட்டிஷ் பிரசாந்த் சினிமாவில் உங்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது அது ‘Paid Reviewer Prashanth’ என்று குறிப்பிட்டு ‘அடுத்து யாரிடம் கையேந்தலாம் என யோசியுங்கள்’ யாரிடம் கையேந்தலாம் என்று யோசியுங்கள் கடுமையாக சாடியுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீஜர் யூடியூபர் இட்டிஷ் பிரசாந்த்துக்கு பதிலடி கொடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பட இயக்குனர் ஸ்ரீஜர் கூறியிருப்பதாவது: “Paid Reviewer Prashanth அவர்களுக்கு, சமீபத்தில் எனது இயக்கத்தில் வெளிவந்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தைப் பற்றி தாங்கள் மிக மோசமான ஒரு விமர்சனம் செய்திருந்தீர்கள். ஒரு படத்தை இயக்கிவிட்டு வந்து விமர்சனம் செய்யுங்கள் என்று உங்களிடம் கூற மாட்டேன், காரணம் அது அறிவு சார்ந்தது.

தாங்கள் ஏதோ இந்த சமூகத்தை காப்பாற்ற வந்த புனிதர் போலவும், நான் ஏதோ இந்த சமூகத்தை சீரழிக்க வந்தவன் போலவும் பேசி இருக்கிறீர். உங்களுக்கு ஏன் இந்த வன்மம்? உங்களுக்கு paid Reviewer Prashanth என்றொரு பெயர் இருக்கிறது என்பதை இந்த நாடே அறியும். தயாரிப்பாளர் உங்களுக்கு பணம் தரவில்லை என்று சொன்னால் உங்கள் விருப்பத்துக்கு விமர்சனம் செய்வீர்கள். 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் பெருவாரியான மக்களுக்கு பிடித்த படம், இளைஞர்கள் கொண்டாடும் திரைப்படம். உங்களது தவறான விமர்சனத்தால் நிறைய பேரை குழப்பி விட்டிருக்கிறீர்கள்.

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்த திரைப்படத்தை அனுபவியுங்கள், ஆராய வேண்டாம் என்று கூறி வருகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் அடல்ட் ஜோக்கிற்கு பெண்கள் சிரித்து மகிழ்கிறார்கள் என்று பலர் எனது முகநூல் பக்கத்திலும் வாட்சப்பிலும் எழுதி வருகிறார்கள். அதுதான் இந்த படத்திற்கு சரியான விமர்சனம். மேலும் எனது தயாரிப்பாளரைப் பற்றி தாங்கள் க்ளப் ஹவுசில் தவறாக பேசி இருக்கிறீர்கள்.

எனது தயாரிப்பாளர் திரு.ரவீந்தர் சந்திரசேகரன் அவர்கள் பெரிய அளவில் சினிமாவை நேசிக்கும் மனிதர். அவரைப் போன்றவர்களால் தான் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும் நீங்கள் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தொழில்நுட்பம் பற்றி அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டிருந்தால் உங்களை அறிவாளியாக மதித்து நானே பதில் கூறி இருப்பேன். ஆனால் உங்கள் விமர்சனம் முழுவதும் பழி வாங்கும் நோக்குடன், வன்மம் கலந்து வெளிப்படுகிறது.

கிட்டத்தட்ட நான் இருபது வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன். நிறைய படிப்பவன், நிறைய திரைக்கதை பற்றிய நூல் அறிவும், தேடல்களும் உள்ளவன், என்னை அவ்வளவு சாதாரணமாக நீங்கள் எடை போட்டுவிட வேண்டாம். விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் பால் குடிக்கும் தாயின் மார்பை அறுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அதில் வடியும் குருதியை பால் என நினைத்து குடித்துக் கொண்டிருக்கிறீர்கள். தாய் உயிருடன் இருக்கும் வரைதான் நீங்களும் உயிர் வாழ முடியும். என் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் போன்றோர் அந்த தாய்க்கு சமமானவர்கள்.

இந்த விமர்சனம் மூலம் வந்த பணத்தில் உங்கள் வீட்டு உலையில் கொதிக்கும் ஒவ்வொரு அரிசியும், என் தயாரிப்பாளர் உங்களுக்கு போட்ட பிச்சை. அந்த சோற்றில் கை வைக்கும் போது உங்களுக்கு உடம்பு கூச வேண்டும். என் குடும்பம், உங்கள் குடும்பம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அவர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் உணவளித்து வருகிறார்.

அவரால் நீங்கள் உங்கள் மனைவி குழந்தைகள் பசியாறுகிறீர்கள், ஆனால் உங்களால் அவர் தொழிலில் வருவாய் இழப்பு., இதை நீங்கள் உணர்ந்தது உண்டா? மேலும் உங்கள் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளான நிறைய இயக்குநர்கள் வளர்ந்து விட்டார்கள். ஆனால் நீங்கள்? நான் என் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து விட்டேன். என் தயாரிப்பாளரும் அடுத்த படத்தின் தயாரிப்பில் தீவிரமாகி விட்டார். ஆனால் நீங்கள் அடுத்து யாரிடம் கையேந்தலாம் என யோசியுங்கள்.” என்று இயக்குனர் ஸ்ரீஜர் ரிவியூவர் இட்டிஷ் பிரஷாந்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment