பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். டீஸரின் இறுதியில், ஜோதிகா கெட்டவார்த்தை பேசுவார். அதற்கு பல இடங்களி எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, டிரெய்லரில் அதுமாதிரியான வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், வன்முறைக் காட்சிகள் நிறைய இருப்பதால், இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.
‘நாச்சியார்’ படம் ஏறக்குறைய 100 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தான் ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம். பிப்ரவரி 16ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.