நாளை நாடோடிகள் 2 வெளியாவதில் சிக்கல் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக, “கீ டெலிவரி மெசேஜ்” தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Naadodigal 2 Interim ban
Naadodigal 2 Interim ban

Naadodigal 2: நாளை வெளியாகவிருந்த நடோடிகள் – 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அன்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி சமந்தாவை திக்கு முக்காட செய்த ரசிகர் – வீடியோ உள்ளே

அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளர்களுக்கு வழங்கிய நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் அளித்தாகவும், ஒப்பந்தபடி மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும் அதுவரை படத்தை வெளியிடுவதற்கான “கீ டெலிவரி மெசேஜ்” திரையரங்குகளுக்கு தர “கியூப்” க்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேட்ச் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் விசிலடிக்க வைத்த ரோஹித்! – ஸ்பெஷல் புகைப்படங்கள்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக, “கீ டெலிவரி மெசேஜ்” தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Naadodigal 2 release interim ban madras high court

Next Story
அன்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி சமந்தாவை திக்கு முக்காட செய்த ரசிகர் – வீடியோ உள்ளேSamantha Akkineni report card, samantha movies
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express