Advertisment

விஜய் டிவி ஹிட் சீரியலில் கழற்றி விடப்படும் முக்கிய நடிகை… கேள்வி கேட்ட ரசிகரிடம் கொந்தளிப்பு!

Rachitha Mahalakshmi news in tamil: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியுள்ள நடிகை ரச்சிதா, தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகருக்கு மிகவும் காட்டமாக பதிலளித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
naam iruvar namakku iruvar serial Tamil News: Rachitha reply on fans comment

Serial actress Rachitha Mahalakshmi Tamil News: விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2. இந்த சீரியலில் முன்னணி நாயகியாக நடிகை ‘ரச்சிதா மகாலட்சுமி’ நடித்தார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிவர். தொடர்ந்து இவர் நடித்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

Advertisment
publive-image

இப்படி தமிழ் சீரியல்களில் கலக்கி வரும் நடிகை ரச்சிதா இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. மேலும் அவர் வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், ஒரு கன்னட படத்தில் பெரிய நடிகருடன் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ‘நீங்கள் சீரியலில் இருந்து விலகுகிறார்களா ‘ என்று கேள்வி எழுப்பினர். இந்த தொடர் கேள்விகளுக்கு பதில் அளித்த ரச்சிதா, ஓஹோ இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஜில் பண்ணுங்க. எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறியிருந்தார்.

publive-image

இந்நிலையில், தான் நடிக்கும் கன்னட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நடிகை ரச்சிதா. இந்த பதிவிற்கு கமெண்ட் செய்திருந்த ரசிகர் ஒருவர், "ஒரு வாரமா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்ல நீங்க இல்லாம ரொம்ப வருத்தமா இருக்கு" என்றிருந்தார். "இது என் பிரச்சனை இல்ல. நீங்கள் இயக்குநர் மற்றும் கதை எழுதுபவரிடம் தான் இதை கேட்க வேண்டும்" என்று கொந்தளித்துள்ளார் ரச்சிதா.

publive-image

‘ரங்கநாயக’ என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், அவர் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் படம் ஆகும். இந்த படத்தை இயக்குநர் குருபிரசாத் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகர் ஜகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Serial Actress Tv Serial Tamil Serial News Serial Actress Rachitha Mahalakshmi Tamil Serial Update Vijaytv Serial Naam Iruvar Namakku Iruvar Actress Rachitha Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment