Advertisment

விஷால்-வரலட்சுமி: உண்மையில் நடிகர் சங்க தேர்தல் தான் உங்கள் பிரச்னையா?

முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை சாடுவதைப் போல இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vishal Varalaxmi sarathkumar

Nadigar Sangam Election: நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.

Advertisment

இந்த முறை விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யும், பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் களமிறங்குகிறார்கள்.

சில நாட்களுக்கு தனது அணிக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக, ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விஷால். அதில் பெரும்பாலும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை சாடுவதைப் போல இருந்தது.

இந்நிலையில், கொதித்தெழுந்த வரலட்சுமி சரத்குமார் காட்டமாக கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகையும், சரத் குமாரின் மனைவியுமான ராதிகாவும் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் விஷாலிடம் கேட்டனர். அதற்கு ’வரலட்சுமி உட்பட என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் அவர்களது கருத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. ஜனநாயகத்தில் அனைவரும் கருத்து கூற முடியும். நடிகர் சங்கத்திலும் அந்த ஜனநாயகம் இருக்கிறது’ என்றார். இந்த சர்ச்சை குறித்து மேலும் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் கூற மறுத்த அவர், இந்த முறையும் பாண்டவர் அணி தான் வெற்றி பெறும் என்றார்.

Varalaxmi Sarathkumar with Vishal

இதற்கிடையே இந்த பிரச்னையை பல கோணங்களில் இருந்து நம்மால் அணுக முடிகிறது.

அதாவது கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் விஷாலும், சரத் குமாரும் எதிரெதிர் துருவங்களில் நின்றார்கள். இதுவரை பொறுப்பில் இருந்தவர்கள் நடிகர் சங்கத்திற்காக எதுவும் செய்யவில்லை என அப்போதும் விஷால் கூறினார். எதிர் தரப்பில் ராதிகா மட்டும் தான் விஷாலின் பேச்சுகளுக்கு பதிலும், கண்டனமும் தெரிவித்து வந்தார்.

தன் தந்தை தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவர் மீது தனது நண்பரும், எதிர் அணியில் அங்கம் வகிப்பவருமான விஷால் இத்தனை குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறாரே என வரலட்சுமி வெளிப்படையாக வருத்தப் படவில்லை. தந்தை ஒருபுறம் நண்பர் மறுபுறம் என்றிருந்த போது, யாருக்கு தனது ஆதரவு என எதையும் கூறவில்லை வரு. யாருக்காகவும் ஆதரவாக பொது வெளியில் கருத்து கூறவும் இல்லை. ஆனால் அப்போதும் இதே மாதிரி தான் பொது வெளியில் சரத் குமாரை தக்கிக் கொண்டிருந்தார் விஷால்.

இந்நிலையில், தற்போது சரத்குமார் போட்டியிடவில்லை, காரணம் கேட்டால், நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அதனால் என்னால் இதைப் பற்றி கருத்து கூற முடியாது என்கிறார்.

Nadigar Sangam - Radhika-Vishal

திரும்ப இந்த முறையும் சரத் குமாரை சாடுகிறார் விஷால். ஆனால் உடனடியாக இந்த முறை வரலட்சுமியிடமிருந்து எதிர் கருத்து, பயங்கர காட்டமாகவே வருகிறது. நியாயமாக இதே கோபம் கடந்த முறையும் வந்திருக்க வேண்டும் தானே? அப்படியெனில் கடந்த முறை விஷால், சரத்குமார் மீது வைத்த குற்றச்சாட்டுகளை மெளனமாக ஏற்றுக் கொள்கிறாரா வரலட்சுமி?

இப்போதும் விஷாலை வார்த்தைக்கு வார்த்தை ‘ரெட்டி’ எனக் குறிப்பிட்டு தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறார் ராதிகா. ‘உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும் போது, சரத் குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?’ என்றெல்லாம் கேட்கிறார்.

மறுபுறம் ‘உன்னுடைய ரெட்டை வேடமும், பொய்யும் நாங்கள் அறிவோம்’ என்கிறார் வரலட்சுமி. வருவின் இந்த கடிதத்தை ராதிகாவும் ரீ ட்வீட் செய்திருக்கிறார். ஒரு சின்ன விமர்சனத்திற்குக் கூட உடனுக்குடன் பதில் தரும் விஷால், வரலட்சுமி மற்றும் ராதிகா விஷயத்தில் மட்டும் மெளனம் காக்கிறார்.

அதையும் மீறி இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்டால், ’கருத்து கூற ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு’ என பட்டும் படாமல் பதிலளிக்கிறார்.

உங்கள் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்தில், உண்மையை உலகுக்கு சொல்லுவது தானே சரியாக இருக்கும் விஷால். ஒருவேளை இந்தத் தேர்தலிலும் ஜெயித்தீர்களென்றால், அடுத்த தேர்தலில் போட்டியிடும் போது, மீண்டும் சரத் குமாரை குற்றம்சாட்டி உங்கள் அணிக்கு வாக்கு சேகரிப்பீர்களா?

இப்போது இருக்கும் கோபமும், அப்பா மீதான அக்கறையும் ஒரு அன்பான மகளுக்கு எப்போதும் இருக்க வேண்டும் தானே வரலட்சுமி?

Vishal Varalakshmi Sarathkumar Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment