Advertisment

Madam-ku ரொம்ப பெரிய மனசு... சீரியலிலும் நல்லது பண்றாங்களே..!

Namitha enters serials acts in zee tamizh puthuputhu arthangal: ஜீ தமிழ் டிவி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த நமிதா; புதுபுது அர்த்தங்கள் சீரியல் வீடியோ...

author-image
WebDesk
New Update
Madam-ku ரொம்ப பெரிய மனசு... சீரியலிலும் நல்லது பண்றாங்களே..!

நடிகை நமிதா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முன்னனி சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரியாகிறார்.

Advertisment

கேப்டன் விஜய்காந்த்க்கு ஜோடியாக எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. பின்னர் மகா நடிகன், ஏய், ஆணை, சாணக்யா, அழகிய தமிழ் மகன், குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஹிட் படமான புலிமுருகன் திரைப்படத்திலும், நமிதா நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்படும், ‘பௌவ்பௌவ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், நமிதா விஜய் டிவியின் ஹிட் ஷோவான, பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துக் கொண்டார். பின்னர் வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த நிலையில் நமிதா, தற்போது சின்னத்திரையில் சீரியலில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரியாகியுள்ளார் நமிதா. இந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயாணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நமிதா சீரியலில் நடித்துள்ள காட்சிகளை ஜீ தமிழ் டிவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரோட்டில் உள்ள குழியைப் பார்த்து நமிதா, கவலைப்பட்டு, அதை மூட நினைக்க, அப்போது அந்த வழியாக வரும் பவித்ரா, பள்ளத்தை மூடி, பள்ளம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் சில கற்களை வைக்கிறார். இதைப்பார்த்து நமிதா அவரை பாராட்டுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Namitha Pudhu Pudhu Arthangal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment