ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையில் நயன்தாரா

‘ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையில் தான் நயன்தாரா நடித்துள்ளார்’ என ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

‘ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையில் தான் நயன்தாரா நடித்துள்ளார்’ என ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

‘டிமான்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தில் நயன்தாரா, பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா ஜோடியாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

முதலில் இந்தக் கதையை ஹீரோவுக்காகத்தான் எழுதினாராம் அஜய் ஞானமுத்து. “இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன்.

ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட்சிகள் காமெடியாக இருக்கக் கூடாது என்பதில் நயன்தாரா தெளிவாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

×Close
×Close