Advertisment

’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..!

நீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara - vignesh shivan

nayanthara

Nayanthara's Wedding: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா.

Advertisment

சமீபத்தில் இவரது நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வெளியானது. தவிர பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நயனின் நடிப்பில் ‘ஐரா’ படம் வெளியானது. இதில் கறுப்பு நிறம் கொண்ட கிராமத்துப் பெண், மார்டன் பெண் என இருவேடங்களில் நடித்திருந்தார்.

இந்த கறுப்பு நிற கேரக்டரின் சிறு வயது தோற்றத்தில் கேப்ரில்லா செல்லஸ் என்பவர் நடித்திருந்தார்.

publive-image

இந்நிலையில் திருமணத்துக்கு தயாராகியிருக்கும் கேப்ரில்லா, தனது வருங்கால கணவர் ஆகாஷ் என்ற ஒளிப்பதிவாளருடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக நீண்ட நாட்களாகவே கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். எனினும் இவர்களது திருமணத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

 

Tamil Cinema Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment