சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது.