Advertisment

Agalaathey: ’நேர்க்கொண்ட பார்வை’ படத்தின் ரொமாண்டிக் பாடல்!

Agalaathey song: இதில் 3 பாடல்கள் ஏற்கனவே தனித்தனியாக வெளியிடப்பட்டுவிட்டன. படத்தின் தீம் பாடலான, ’தீ முகம் தான்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nerkonda paarvai agalaathey release

Nerkonda paarvai agalaathey release

Ajith's Nerkonda Paarvai: கடந்த 2016-ம் இந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘பிங்க்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித் நடித்துள்ளார். நேர்க்கொண்ட பார்வை என அந்தப் படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

’சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத் இதனை இயக்கியுள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி ஐயர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் ’ஸீ’ ஸ்டூடியோஸுடன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. தீம் பாடலோடு சேர்த்து, ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் மொத்தம் 4 பாடல்கள்.

Singappenney: ரசிகர்களும் பெண்களும் பிரபலங்களும் கொண்டாடும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல்!

இதில் 3 பாடல்கள் ஏற்கனவே தனித்தனியாக வெளியிடப்பட்டுவிட்டன. படத்தின் தீம் பாடலான, ’தீ முகம் தான்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீதமிருக்கும் ஒரு பாடலான, “அகலாதே” பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை இசையமைப்பாளர் யுவன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சரியாக 6 மணிக்கு ‘அகலாதே’ பாடல் வெளியாகும் என மீண்டும் நினைவூட்டியிருந்தார் யுவன்.

தற்போது அந்தப் பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் பா.விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவும், பிரித்வியும் இணைந்து ரொமாண்டிக்காக பாடியிருக்கிறார்கள். கணவன் மனைவிக்கு இடையேயான அன்பை விளக்கும் இந்தப் பாடல் அஜித் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Ajith Yuvan Shankar Raja Vidya Balan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment