ரஜினிகாந்த் தான் அடுத்த முதல்வர்... அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்!

ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா தனது பெயரை ரோகிணி என மாற்றிக் கொண்டார் என்றால் அவர் இந்தியாவின் வருங்கால பிரதமர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் அடித்து கூறியிருப்பது கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை என்பது தேசிய அளவில் பேசப்பட்டு வரும் செய்தி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையல் தான் திரையுறையில் இரண்டு தூண்களாக இருந்த நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இதில் நடிகர் கமல் கட்சியை தொடங்கி சுற்றுப்பயனம் வரை சென்று விட்டார்.

நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சிக்கான பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இந்த இருவர்களில் அரசியலில் வெல்லப்போவது யார்? என்ற கேள்வி பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் மனதிலும் ஆழமாக எழுந்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் வெற்றி ரஜினிகாந்த தான் அடுத்த முதல்வர் ஆவர் என்று பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் கணித்து கூறியுள்ளார். இவர் தான் இந்திய பிரதமர் தெர்தலில் மோடியின் வெற்றியையும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பிரம்மாண்ட வெற்றியையும் கணித்து கூறியவர்.

ஹைதராபாத்தில் நேற்றைய (25.6.18) தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிடர் கியானேஷ்வரிடம் செய்தியாளர்கள்,இந்தாண்டுக்கான அரசியல் நிலைமை எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு ஆச்சரியமான பல பதில்களை கியானேஷ்கர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு நடிகர் ரஜினிகாந்திற்கே இருக்கிறது.ரஜினிகாந்தின் கட்சி ஒரு இடைத்தேர்தலை சந்தித்து ஆட்சியமைக்கும். அதே போல் ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா தனது பெயரை ரோகிணி என மாற்றிக் கொண்டார் என்றால் அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் .

LOVE YOU UNCONDITIONALLY????????????✨Happiest Mama in the World ????

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் ஆட்சியை பிடிப்பார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே 2024-ம் ஆண்டில் போர் மூளும். முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு 2019ம் ஆண்டில் திருமணம் நடைபெறும்” என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் அரசியல் வாழ்க்கை பற்றி ஜோதிடர் கியானேஷ்வர் கூறியிருப்பது ட் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close