டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் , கலகலப்பு – 2 உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணி தனக்கு கொரோன தொற்று இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்வீட் செய்தியில், “கடந்த வாரம் எனக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நான், தர்போது நோயில் நன்கு குண்டமடைந்து வருகிறேன். நன்றாகவும் உணர்கிறேன். எனது வருகைக்காக காத்திருந்த நெருங்கிய நண்பர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்கள், தொடர்ச்சியாக ஆதரவளித்த சென்னை மாநகராட்சி ஆணையத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.
நிக்கி கல்ராணியின் உருக்கமான வேண்டுகோள், “அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் எனக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவதூரான கருத்துக்கள் உள்ளன. எனவே எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மோசமான தொண்டை வலி, காய்ச்சல், வாசனை/சுவை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் லேசான பாதிப்புக்கு உள்ளகியிருந்தேன். இருப்பினும், தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி நான் நன்றாக குணமடைகிறேன். வீட்டில் தங்கி என்னை தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கின்றேன்.
அனைவருக்கும் இது மிகவும் போதாத காலம் என்று எனக்குத் தெரியும். இருப்பினும், நாம் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
எனது வயதையும், முந்தைய மருத்துவ நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நான் எளிதில் குனமடைவேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனது பெற்றோர், பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அனைவரையும் நினைக்கும் போது நான் அஞ்சுகிறேன்.
எனவே தயவுசெய்து முகக்கவசம் அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது, கைகளை தவறாமல் சுத்தப்படுத்துவது, வெளியே செல்வதை தவிர்ப்பது போன்றவைகளை கடைபிடிக்க கேட்டுக் கொள்கிறேன். பல மாதங்கள் வீட்டில் உட்கார்ந்திருப்பது வெறுப்பாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் பெருந்தொற்று காலத்தில் வாழ்ந்து வருகிறோம். சமூகத்திற்காக உங்கள் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள், உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள், உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனச்சோர்வடைந்தால் தயவுசெய்து உதவியை அணுகுங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
அதிக அனுபுடன் நிக்கி கால்ரானி ” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook