Advertisment

‘நிமிர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
nimir audio launch

ப்ரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. திலீஷ் போத்தன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்துள்ளார் ப்ரியதர்ஷன்.

Advertisment

‘நிமிர்’ படத்தில் நமீதா ப்ரமோத், பார்வதி நாயர் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

மூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத் இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, அய்யப்பன் நாயர் எடிட் செய்துள்ளார்.

‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Tamil Cinema Udhayanidhi Stalin Parvatii Nair Namitha Pramod
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment