Advertisment

விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nivetha Pethuraj's next with Allu Arjun

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

Advertisment

எழில் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. நிக்கி கல்ரானி ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடித்திருந்தார். மேலும், ரோபோ சங்கர், ‘ஆடுகளம்’ நரேன், ரவிமரியா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சோனியா போஸ், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பரோட்டா’ சூரியாக இருந்தவரை, ‘புஷ்பா புருஷன்’ சூரியாக மாற்றியது இந்தப் படம்தான். அத்துடன், ‘அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்’ என்ற ரோபோ சங்கரின் காமெடி காட்சியும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு அருமையாக இருந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தை இயக்கினார் எழில். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. இந்நிலையில், மறுபடியும் விஷ்ணு விஷாலுடன் இணைந்துள்ளார். இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்தப் படத்தில், ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

ஜெயம் ரவி ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை, சிவாஜியின் பேரனான துஷ்யந்த், தன்னுடைய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது.

Tamil Cinema Vishnu Vishal Nivetha Pethuraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment