Advertisment

தடைகளைத் தகர்த்தெறிந்து ரிலீஸாகிறது ‘பத்மாவதி’

அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா முழுவதும் வருகிற 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
padmavati-film-of-deepika-padukone-nice-hd-picture

அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா முழுவதும் வருகிற 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’.

Advertisment

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தக் கலவரங்கள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வருகிற 25ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ஆனால், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய 6 மாநிலங்களில் இந்தப் படம் ரிலீஸாகத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், மேற்கண்ட மாநிலங்களில் ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், பிற மாநிலங்களில் தடை விதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

பல தடைகளுக்குப் பின், அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாகிறது ‘பத்மாவதி’.

Deepika Padukone Sanjay Leela Bhansali Padmavati Padmavati Controversy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment