NTR Trailer release : என்.டி. ராம ராவ் வாழ்க்கை வரலாறு டோலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் என்.டி.ஆர் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
நந்தமுரி பாலகிருஷ்ணன் மற்றும் வித்யா பாலன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் என்.டி.ஆர். இப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு பிரபல நடிகர் என்.டி ராம ராவ் வாழ்க்கை கதை. இப்படத்தில் என்.டி.ஆர் கதாப்பாத்திரத்தில் அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணனே நடித்திருக்கிறார். பின்னர் அவரது மனைவி கதாப்பாத்திரத்தில் தெலுங்கு சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் வித்யா பாலன்.
NTR Trailer release : என்.டி.ஆர். டிரெய்லர்
சினிமா நடிகர் முதல் ஆந்திர மாநிலத்தை தொடர்ச்சியாக 7 வருடம் ஆட்சி செய்த முதலமைச்சர் வரை என்.டி.ஆர்-ன் வாழ்க்கை கதையே இதில் அடங்கியிருக்கிறது. இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. என்.டி.ஆர் கதாநாயகுடு மற்றும் என்.டி.ஆர் மஹாநாயகுடு என பெயரிடப்பட்டு இரண்டு பாகமாக வெளிவரும்.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. என்.டி.ஆர் மாயாபஜார் படத்தில் வரும் கிருஷ்ணன் கதாப்பாத்திற்கு தயாராவது போல் தொடங்குகிறது இந்த டிரெய்லர். தெலுங்கு சினிமா உலகில் கிருஷ்ணன் அல்லது ராமர் வேஷமென்றாலே என்.டி.ஆர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த டிரெய்லர். இதை குறிப்பிடும் வகையில், “இதுவரை என்னை கடவுளாக மக்கள் பார்த்தால், இனிமேல் மனிதனாக என்னைப் பார்ப்பார்கள்” என டயலாக் பேசுகிறார்.
பின்னர் காட்சிகள் வேகமாக கடக்க, சினிமா காட்சிகள், ஆர்பரிக்கும் ரசிகர்கள் என நம் கவனம் முழுவதும் டிரெயலரிலேயே இருக்கிறது. இறுதியில், என்.டி.ஆரின் அரசியல் பிரவேசம் அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என எல்லா வகையான உணர்வுகளை பிரதிபலிக்கிறது இந்த டிரெய்லர்.
இந்த டிரெய்லரை நேற்று இரவு முதல் இன்றும் மாலை வரை சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சமீபத்தில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி படத்தின் வசூலையெல்லாம் இந்த படம் தூக்கி சாப்பிட்டுவிடும் என டொலிவுட் பிரியர்கள் கூறி வருகின்றனர்.