Advertisment

DARBAR Promo : தர்பார் படத்தின் முதல் ப்ரோமோ வெளியீடு

Official Release Promo of 'DARBAR : தர்பார் படத்தின் புரமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.32 நொடிகளை கொண்ட இந்த ப்ரோமோ வீடியோவில் 12 நொடிகளே காட்சிகள் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar Movie Review Live, Darbar Movie Release Live

Darbar Movie Review Live, Darbar Movie Release Live

Official Release Promo of 'DARBAR ' : ரஜினிகாந்தின் 167-வது படமாக வெளிவரும் தர்பார் படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார்.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

தர்பார் படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 7ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. பொங்கல் திருநாள் அன்று வெளியாகும் என்று எதிரப்பர்க்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 9ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையிடப்படம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

தர்பார் படத்தின் ப்ரோமோ :

தர்பார் படத்தின் முதல் புரமோ நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.32 நொடிகளை கொண்ட இந்த ப்ரோமோ வீடியோவில் 12 நொடிகளே காட்சிகள் உள்ளன. மிச்சம் 20 நொடிகள் தர்பார் படத்தின் போஸ்டர் தான்.

இவருக்கு 70 வயசாம்; அடப் போங்கயா! - சுடச்சுட தர்பார் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோஸ்

இந்த ப்ரோமோ- ரஜினி காந்த், நயன்தாரா இடையிலான உரையாடல்கள் மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளன.  ப்ரோமோவில், மருத்துவமனை வாசலில் ரஜினி நயன்தாராவிடம் ஏதோ சொல்ல வருவது போல திக்குகிறார், அதற்கு நயன்தாரா எனக்கு உருது மொழி  தெரியாது என்று  கூறுகிறார். மேலும் அருகில் உள்ள செவிலியரிடம் நீங்கள் இவரை இஎன்டி மருத்துவமனைக்கு இட்டு செல்லுங்கள் என்பது போல் காட்சிகள் காட்டப்படுகின்றன.

தோழர்களே, # தர்பாரில் தலைவரின் அழகான, காதல் காட்சிகளின் ஒரு கண்ணோட்டம் என்று பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

ப்ரோமோ வரும் கமெண்ஸ்கள்:

 

 

 

Rajini Kanth Nayanthara A R Murugadoss Darbar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment