'விஐபி' தீம் மியூசிக்குடன் பிக்பாஸ் மேடையில் ஓவியா: 'ஐ லவ் யூ' என்று அதிர வைத்த ரசிகர்கள்!

ரசிகர்களின் பேராதரவுடன் வலம் வந்த ஓவியா, இன்று அந்த ரசிகர்கள் முன் நேரடியாக தோன்றும் போது சும்மாவா இருப்பார்கள் ரசிகர்கள்

ஆரவ் உடனான காதல் மாயை காரணமாக, தீவிர மன அழுத்தத்தில் இருந்த ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், தொகுப்பாளர் கமலுடன் அவர் பிக்பாஸ் மேடையில் உரையாடும் புரமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே, ரசிகர்களின் பேராதரவுடன் வலம் வந்த ஓவியா, இன்று அந்த ரசிகர்கள் முன் நேரடியாக தோன்றும் போது சும்மாவா இருப்பார்கள் ரசிகர்கள்… ‘ஓவியா வீ லவ் யூ’ என்று ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒருசேர கூற, பிக்பாஸ் மேடையே அதிர்ந்தது.

கமல் எனும் ஒரு ஆளுமையின் முன், ஓவியாவிற்கு இந்தளவிற்கு கைத்தட்டல்களும், விசில் சத்தமும் கிடைத்துள்ளது என்றால், அது அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்பதைத் தவிர வேறு நாம் என்ன சொல்ல முடியும்.

அதுசரி! ஓவியா பிக்பாஸ் வீட்டுல இருப்பாங்களா, இல்லையா..? அது சொல்லுங்க முதல்ல-னு நீங்க நினைக்குறது நல்லாவே எங்களுக்கு கேட்கிறது. ஒன்று மட்டும் உண்மை… ஓவியா வீட்டிற்கு செல்கிறார்!

×Close
×Close