‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் நேஹாவுக்கு தங்கச்சி பாப்பா!

Chithi 2 fame Nehah Menon Mother gives birth to a baby girl மருத்துவமனையில் தன் அம்மாவும் தங்கையும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நேஹா.

Pandian Stores Chithi 2 fame Nehah Menon Mother gives birth to a baby girl Tamil News

Pandian Stores Chithi 2 fame Nehah Menon becomes a Sister Tamil News : ‘நிலா’ எனும் சன் டிவி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது ‘சித்தி 2’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய நெடுந்தொடர்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனனுக்கு தங்கை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியைக் வீடியோ மூலம் தன் ரசிகர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

Nehah Menon

‘நாரதன்’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ போன்ற படங்களிலும் நடித்துள்ள நேஹா, சில நாட்கள் முன்பு தன் குடும்பத்தில் நல்ல செய்திகள் காத்திருப்பதாகவும், விரைவில் அதனை சொல்லப்போவதாகவும் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அந்த நல்ல செய்தியைக் காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொளியில், தன் தாய்  கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அதாவது தனக்கொரு ‘தங்கச்சி பாப்பா’ பிறந்திருக்கிறாள் என்றும் கூறியிருக்கிறார். மேலும், மருத்துவமனையில் தன் அம்மாவும் தங்கையும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நேஹா.

Neha Menon with her Mom

நேஹா 2002-ம் ஆண்டு பிறந்தவர். அப்படியென்றால், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரியைப் பெற்றுள்ளார் நேஹா. அதனால், தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்கக் காத்துக் கொண்டிருப்பதாகவும் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்ட தங்களின் நலம் விரும்பிகளுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் நேஹா. புதிதாய் அக்காவாகியிருக்கும் நேஹாவுக்கு நாமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளலாமே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores chithi 2 fame nehah menon mother gives birth to a baby girl tamil news

Next Story
சீரியலுக்கும் வந்துட்டாங்களா ஷிவாங்கி- பாலா? விஜய் டிவி புது அப்டேட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express