Advertisment

ஜோரான வேலை இது… கிராமத்தில் மாடு குளிப்பாட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வீடியோ!

Serial Actress Deepika insta video Tamil News: கொரோனா ஊரடங்கில் சொந்த ஊரில் பொழுதை கழித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜே தீபிகா, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pandian stores serial Tamil News: Serial Actress Deepika insta video

Pandian stores serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒன்றாக உள்ளது. இதற்கு காரணமாக இதன் கதை களத்தை குறிப்பிட்டுக் கூறலாம். ஏனென்றால் கூட்டுக் குடும்ப கதையை மைய கதையாக கொண்டு காட்சி அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் அண்ணன் - தம்பி பாசத்தை மிகவும் அழுத்தமாகவே பேசுகிறது.

Advertisment

இந்த கதையில் வரும் முதல் 3 அண்ணன்களும் திருமணமாகி செட்டில் ஆகி இருப்பார்கள். ஆனால் இவர்களின் கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பார். மேலும் அதே கல்லூரியில் படித்து வரும் உறவுக்கார பெண் ஐஸ்வர்யாவை காதலித்தும் வருவார்.

இந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்திருக்கும் தீபிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சீரியல்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் பொழுதை கழித்து வருகிறார் தீபிகா. சமீபத்தில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தீபிகா ஒரு பசு மாட்டை குளிப்பாட்டி விடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Serial Actress Tv Serial Tamil Serial Update Vijaytv Serial Tamil Serial Pandian Stores Pandian Strores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment