Pandian stores VJ Deepika latest video goes controversy: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜே தீபிகா, காமெடி நடிகர் செந்தில் மாதிரி தூக்கு மாட்டிக் கொள்வது போல் ஜாலியாக நடித்து வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விஜே தீபிகா. அந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இவர் விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலிலும், சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தனது யூடியூப் சேனலில் அழகு குறிப்புகள், ஊர் சுற்றுவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் இவருக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
இந்தநிலையில், இவரது சமீபத்திய ஷார்ட்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையாகியுள்ளது. ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் செந்தில் தூக்கு மாட்டிக் கொள்வது போல் நடித்து, அவா அவா என்று பாடி கவுண்டமணியை வெறுப்பேற்றுவார். இந்த சீனை பலரும் தூக்கு மாட்டிக் கொள்வது போல் இல்லாமல், சும்மா கீழே நின்று நகைச்சுவையாக நடித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ஆனால் விஜே தீபிகா உண்மையாக தூக்கு மாட்டிக் கொள்வது போல், அந்த காமெடி சீனில் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் சீலிங்கில் புடவையை சுற்றி அவா அவா என பாடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: “தமிழ் தான் இணைப்பு மொழி” – தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இசைப் புயல்
ஆனால் விஜே தீபிகா இவ்வாறு வீடியோ வெளியிட்டு இருப்பதை நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், ஜாலியான வீடியோவாக இருந்தாலும், இப்படியான வீடியோவுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சில நெட்டிசன்கள், இவரை பார்த்து ரசிகர்கள் சிலர் இப்படி கழுத்தில் புடவையை சுற்றிக்கொண்டு சேர் மீது ஏறி வீடியோ போடலாம் என்றும் எதிர்பாராத வகையில் கழுத்தில் சுற்றியுள்ள புடவை இறுக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil