தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பராகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி என அனைவரும் இருப்பதால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூட்டு குடும்பமாக இருந்து வந்த நிலையில், வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு, ரூ. 50,000 பணத்திற்காக மீனாவின் அப்பா சண்டை போட கதிர், முல்லை வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கின்றனர்.
இந்த சீரியலில் இரண்டாவது அண்ணன் ஜீவாவுக்கு ஜோடியாக மீனா கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் ஹேமா. இவரது நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. ஜீவாவிடம் சண்டை போடும் காட்சிகள் வரவேற்பை பெற்றது. இவர் ஹேமா டைரிஸ் என யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடக்கும் இடம், சீரியலின் போது என்ன செய்வார்கள் என தனது சேனலில் பதிவிடுவார். கலகலப்பாக பேசும் அவரை சமூகவலைதளங்களிலும் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வழக்கமாக வீடு, அவர்களது கடை என கதை நகரும். வரும் வாரங்களில் புது லொக்கேஷனில் கதை இருக்கும் என்று தெரிகிறது. புது லொக்கேஷன் காட்சிகள் வளசரவாக்கத்தில் உள்ள ஏஆர்எஸ் காட்டனில் எடுக்கப்படுகிறது. இந்த இடத்தில் நிறைய சீரியல், சினிமா படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி சீன் நிறைய அங்கு எடுத்துள்ளனர். இதை மீனா அவரது யூட்யூப் சேனலில் பதிவிட்டார். வெடிகுண்டு முருகேசன் படத்தில் பசுபதியும், வடிவேலுவும் ஹோட்டலுக்கு செல்லும் காட்சிகள் அங்கு தான் எடுத்துள்ளனர். வடிவேலுவின் காமெடிகள் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லா வயதினரும் ரசிக்கும்படியாக அவரது காமெடிகள் அமையும். சூப்பர் ஹிட் பாடல்கள், படங்கள் போல், சூப்பர் ஹிட் காமெடிக்கு சொந்தக்காரர் வடிவேலு.
ஏஆர்எஸ் காட்டனில் பல தொலைக்காட்சி சீரியல்கள் எடுக்கப்படுகின்றன. கம்பீரம் படத்தில் கஞ்சா காஞ்சனாவை வடிவேலு கைது செய்ய போகும் சீன் பலருக்கும் பிடித்த காமெடி. அந்த சீனும் அங்குள்ள குடிசை செட்டில் தான் படமாக்கி உள்ளனர். ஏஆர்எஸ் காட்டனில் இந்த செட்களை மீனா காண்பித்து பகிர்ந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil