Advertisment

Paramapatham Vilaiyattu Trailer: மருத்துவமனையில் தமிழக அரசியல்வாதி, பிரச்னையில் த்ரிஷா!

Paramapatham Vilaiyattu Trailer: மருத்துவராக த்ரிஷா, அவருக்கு ஐந்தாரு வயதில் வாய் பேசாத, காது கேளாத பெண் குழந்தை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trishan Controversial message on Rana

Trishan Controversial message on Rana

Paramapatham Vilaiyattu Trailer: தமிழ் சினிமாவின் தொடர்ந்து 17 வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Advertisment

இதை முன்னிட்டு த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகரும், ’96’ படத்தில் இணைந்து நடித்தவருமான விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் த்ரிஷா. அதில் ”மே 4 என்றாலே எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். இந்த வருடம் கூடுதல் ஸ்பெஷல். காரணம் நான் நடித்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு படத்தின் ட்ரைலர் மற்றும் செகண்ட் லுக் வெளியாகிறது.

’பரமபதம் விளையாட்டு’ ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் படம். இந்த ஜானர்ல நான் நடிக்கிற முதல் படம். ஒருநாள் இரவில் காட்டுக்குள் நடக்கும் கதை தான் முழு படமும். அதோடு இதில் அம்மா - பொண்ணுக்கு இடையேயான உணர்வுப் பூர்வமான அம்சங்களும் உண்டு.

இதைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துகளை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தெரியப்படுத்துங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

Paramapatham Vilaiyattu Trailer is out now

இயக்குநர் திருஞானம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

“15 நாளுக்கு முன்னாடி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆன எதிர்கட்சித் தலைவர் திரு.செழியனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு” என பிரஸ் மீட்டில் த்ரிஷா சொல்லும்படியாக ட்ரைலர் ஆரம்பிக்கிறது.

மருத்துவராக த்ரிஷா, அவருக்கு ஐந்தாரு வயதில் வாய் பேசாத, காது கேளாத பெண் குழந்தை. மருத்துவமனையில் சிசிடிவி கேமரா இல்லை.

செழியனைக் கொல்லத் துடிக்கும் சக அரசியல்வாதிகள், அவருக்கு உதவ போய் த்ரிஷா சந்திக்கும் பிரச்னைகள் என த்ரில்லராக சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை தமிழக அரசியலை பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tamil Cinema Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment