Advertisment

பென்குயின்: வெளியாவதற்கு 2 மணி நேரம் முன்பே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்

TamilRockers: ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்குப் பிறகு, அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்பட்டுள்ள இரண்டாவது தமிழ் திரைப்படம் பென்குயின்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
keerthy suresh penguin twitter reactions, penguin review

keerthy suresh penguin twitter reactions, penguin review

Penguin In TamilRockers: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பென்குயின். ஆனால் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டலில் வெளியாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில், படம் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

கீர்த்தி சுரேஷ் ’நடிகையர் திலகம்’ படத்திற்கு பின், கதாநாயகிக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் பென்குயின் படத்தில், ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். த்ரில்லர் படமான இதில், மன நோயாளியிடம் சிக்கி தவிக்கும் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முக்கிய கருவாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

Keerthy Suresh Penguin Full Movie Leaked To Free Download In Online

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்குப் பிறகு, அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்பட்டுள்ள இரண்டாவது தமிழ் திரைப்படம் பென்குயின். பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் 12-ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Keerthy Suresh Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment