Advertisment

Petta Box Office Collection Day 1: முதல் நாளில் பேட்ட குவித்த கோடிகள் எத்தனை?

Petta Movie Tamil Nadu Collection: முதல் நாள் கலெக்‌ஷன் அதிகம் யார்? பொங்கல் வரையிலான பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? என இரு அளவுகோல் அடிப்படையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கணக்கீடு இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Petta Box Office Collection, பேட்ட தியேட்டர் வசூல்

Petta Box Office Collection, பேட்ட தியேட்டர் வசூல்

Rajinikanth's Petta Box Office Collection: ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வெளியாகியிருக்கும் பேட்ட, வசூலில் ‘மாஸ்’ காட்டுகிறதா? இதன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் முதல் நாள் ரிப்போர்ட் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். ஜனவரி 11 காலை கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அமெரிக்காவில் பேட்ட படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் 7.5 லட்சம் டாலர் என்கிறார், விமர்சகர்களில் ஒருவரான ரமேஷ் பாலா. தமிழகத்தைப் பொறுத்தவரை விஸ்வாசம் கலெக்‌ஷன் சற்று தூக்கலாக இருந்தாலும், உலக அளவில் பேட்ட கலெக்‌ஷன் அதிகம் என்கிறார் அவர்.

Advertisment

பேட்ட, ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் படம்! பேட்ட, விஸ்வாசம் என இரு படங்கள் ஒரே நாளில் வெளியானதால் இரு படங்களுக்கும் தியேட்டர்களை கைப்பற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களில் போட்டி களைகட்டியது.

Petta Box Office Collection, பேட்ட தியேட்டர் வசூல் Petta Box Office Collection: பேட்ட தியேட்டர் வசூல் நிலவரம்

Petta Box Office Collection Day 1 In Tamil Nadu Theatres: பேட்ட படம் வசூல்

அடுத்தகட்டமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் நிலவரங்கள் அதிகம் கவனிக்கப்படுகிறது. உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரஜினி படத்திற்கு மார்க்கெட் வேல்யூ இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் முதல் நாள் கலெக்‌ஷன் 5 லட்சம் டாலர் (முதல் நாள் மாலை நிலவரம்) என்கிறது, அங்கிருந்து வரும் தகவல்! இது 2.0-வுக்கு அடுத்தபடியான இந்தியப் படத்தின் பெரிய கலெக்‌ஷன் என்கிறார்கள்.

ஜெர்மனியில் 75 ஸ்கிரீன்களில் வெளியான பேட்ட, முதல் நாளில் 91,000 டாலர்களை வசூலித்திருக்கிறது. விஸ்வாசம் இங்கு தனது கணக்கை தொடங்கவே இல்லை. மலேசியாவில் 120 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன பேட்ட, அங்கும் கணிசமான வசூலை குவித்திருக்கிறது.

Read More: Petta review- காளி ஆட்டம் எப்படி இருக்குது?

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் என்கிற ட்விட்டர் கணக்கில் தரப்படும் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் விஸ்வாசம் கலெக்‌ஷன் முதல் நாளில் 25 கோடியை நெருங்கும் என்கிறார்கள். ஆனால் விஸ்வாசத்தைவிட குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கும் பேட்ட 22 கோடியை தொடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாள் கலெக்‌ஷனை உலக அளவில் எடுத்துக் கொண்டால், பேட்ட முன்னிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். தவிர, தமிழ்நாட்டிலும் 2, 3, 4-வது நாள் முன்பதிவில் பேட்ட படத்தின் ஆதிக்கம் மிகுந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

முதல் நாள் கலெக்‌ஷன் அதிகம் யார்? பொங்கல் வரையிலான பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? என இரு அளவுகோல் அடிப்படையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கணக்கீடு இருக்கும்.

லேட்டஸ்ட் அப்டேட்: ஜனவரி 11 காலை கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அமெரிக்காவில் பேட்ட படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் 7.5 லட்சம் டாலர் என்கிறார், விமர்சகர்களில் ஒருவரான ரமேஷ் பாலா. தமிழகத்தைப் பொறுத்தவரை விஸ்வாசம் கலெக்‌ஷன் சற்று தூக்கலாக இருந்தாலும், உலக அளவில் பேட்ட கலெக்‌ஷன் அதிகம் என்கிறார் அவர்.

இறுதி நிலவரப்படி தமிழகத்தில் பேட்ட படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் 22 கோடி என்றும், விஸ்வாசம் முதல் நாள் கலெக்‌ஷன் 26 கோடி என்றும் கூறுகிறது ஒரு தகவல்! 2.0 படத்திற்கு தயாரிப்பாளரே அறிவித்ததுபோல அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டால், அனைத்துமே உத்தேசத் தகவல்தான்!

 

Rajinikanth Box Office Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment