Advertisment

பேட்ட தெலுங்கு படத்திற்கு சிக்கல்... காரணம் என்.டி.ஆர் படம் தானா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Petta Telugu, பேட்ட தெலுங்கு

Petta Telugu, பேட்ட தெலுங்கு

ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வர, பேட்ட தெலுங்கு படம் மட்டும் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது.

Advertisment

சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் பெறும் வரவேற்பை பெற்றது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான 2.0 படம், தமிழுக்கு அடுத்ததாக தெலுங்கில் தான் வசூலை அள்ளிக் குவித்தது.

பேட்ட தெலுங்கு ரிலீஸ் சிக்கல்

இதனை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கும் படம் பேட்ட. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் பேட்ட தமிழ் உட்பட தெலுங்கு மொழியிலும் உருவாகியுள்ளது.

இப்படம், 2.0 போலவே தெலுங்கிலும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், என்.டி.அர் வாழ்க்கை சரித்திரம் படம் இந்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலை உள்ளதாலும், என்.டி.ஆர் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு அங்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருப்பதாலும், அந்த படத்தையே அதிக காட்சிகளுக்கும் அதிக தியேட்டர்களில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போக, முன்னணி நடிகர்களான ராம் சரண் தேஜா நடித்துள்ள ‘வினய விதேய நாமா’ படமும், வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் நடித்துள்ள ‘எஃப் 2’ படமும் ரிலீஸ் ஆவதால் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உண்டாகியுள்ளது.

இது குறித்த பேச்சு வார்த்தையை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நடத்தி வருகிறது.

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment