'மாஸ்-னா என்னனு தெரியுமா?' ரோகிணி தியேட்டரில் பதிலளித்த ரஜினி ரசிகர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ம் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதைமுன்னிட்டு வெளியான இரு படங்களின் டிரைலர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக மீண்டும் ஸ்டைல் ரஜினியை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

எல்லாம் நல்லபடியாக தான் சென்றுக் கொண்டிருந்தது. பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுகின்றன என்ற டாக் பொதுவாக இருந்தாலும், விஸ்வாசம் டிரைலர் வெளியான பிறகு நிலைமையே மாறிப் போனது.

பேட்ட படத்தில் ரஜினி பேசிய பன்ச் வசனங்களுக்கு, ஒவ்வொரு ஃபிரேமிலும் அஜித் பதில் அளிப்பது போன்று விஸ்வாசம் டிரைலர் எடிட் செய்து வெளியிடப்பட்டது. எடிட்டர் ரூபென் ஏன் இப்படி செய்தார் என இப்போது வரை புரியவில்லை.

இது ரஜினி ரசிகர்களுக்கே பெரிய ஷாக் தான். காரணம், அஜித்தையோ, அஜித் ரசிகர்களையோ ரஜினி ரசிகர்கள் இதுவரை போட்டியாக பார்த்ததே இல்லை. காரணம், அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ரஜினிக்கும் ரசிகர்களாக இருந்தனர். ஏன், அந்த நடிகர்களே ரஜினியின் ரசிகர்கள் தான், அஜித் உட்பட.
இதை அஜித்தும் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்படியொரு நிலையில், சில அஜித் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் சமூக தளங்களில் பதிவிடும் கருத்துகள், இரு நடிகர்களின் நட்பையும் பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

பல தியேட்டர்களில் 2 ஷோ பேட்ட, 2 ஷோ விஸ்வாசம் என ரிலீசாக உள்ளது. அங்கு இரு தரப்பு ரசிகர்களும் வருவார்கள். பொதுமக்களும் வருவார்கள். சாதாரண டிரைலருக்கே மீம்ஸ், ட்ரோல், சமூக தளங்களில் மோசமான ட்வீட்கள் என்று மோதிக்கொள்ளும் ரசிகர்கள், தியேட்டரில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்தாலே பக்கென்று உள்ளது.

இந்நிலையில், விஸ்வாசம் டிரைலர், கடந்த டிச.30ம் தேதி ராம் முத்துராம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கே முண்டியடித்துச் சென்ற ரசிகர்கள், தியேட்டரில் டிரைலரை கொண்டாடித் தீர்த்தனர். அதுமட்டுமின்றி, ரஜினி ரசிகர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் விதமாகவும் பதிவுகள் வெளியிட்டனர்.

அதுவரை பொறுமையாக இருந்த ரஜினி ரசிகர்கள், தற்போது சென்னை ரோகிணி தியேட்டரில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட பேட்ட டிரைலரில் தங்கள் கெத்தை காட்டியிருக்கிறார்கள்.


அதில், “ரசிகர்களை திரட்டுவது எங்களுக்கும் தெரியும். நாங்க காட்டிக்க விரும்பவில்லை.. அவ்வளவு தான். டிரைலருக்கு எல்லாம் எதுக்குன்னு வேலை வெட்டி பார்ப்போம்-னு தான் இருந்தோம். ஆனால், சில அஜித் ரசிகர்களுக்கு மாஸ்-னா என்னனு காட்டத் தான் இந்த வீடியோ” என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close