Petta unseen poster : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தில் இதுவரை வெளிவராத போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டே செல்கிறது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இணைந்து நடித்துள்ளது.
Petta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்
அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்கள் சமீபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் வெளியிடப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மரண மாஸ் மற்றும் உல்லால்லா பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதுவரை ரஜினிக்கு மட்டுமே 4 போஸ்டர்களை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ், இன்று மற்றொரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
You have done it in a jiffy! Here is the #Petta unseen still you have been waiting for! pic.twitter.com/ojFY15uh6N
— Sun Pictures (@sunpictures) 18 December 2018
இதுவரை ரஜினி ரசிகர்கள் காணாத போஸ்டர் எனக் குறிப்பிடப்பட்டு இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. காலை 11 மணியளவில் வெளியான இந்த போஸ்டர் சில மணிநேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக் – ரீ ட்வீட்களை பெற்றிருக்கிறது.
.@SasikumarDir as #Maalik#PettaCharacterPoster@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers @Nawazuddin_S pic.twitter.com/A6bdWltVQe
— Sun Pictures (@sunpictures) 17 December 2018
இதே போல், இப்படத்தில் நடிக்கும் சசிகுமாரின் லுக் மற்றும் கதாப்பாத்திரம் பெயரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. மாலிக் கதாப்பாத்திரத்தில் இவர் தோன்றயிருக்கிறார். இந்த போஸ்டரில் சசிகுமார் நிற்கும் தோற்றமும் முக பாவனையும் பார்க்கையில், இவர் வில்லன் கைக்கூலிகளில் ஒருவராக இருப்பாரோ என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Petta unseen poster