/indian-express-tamil/media/media_files/2025/09/23/ramki-1t-10-2025-09-23-17-19-37.jpg)
தமிழ் சினிமாவின் 80களின் இறுதியில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராம்கி. முழுப்பெயர் ராமகிருஷ்ணன். இரட்டை இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகர் இயக்கிய 'சின்ன பூவே மெல்ல பேசு' திரைப்படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். 'செந்தூர பூவே' (1988), 'மருது பாண்டி' (1990), 'இணைந்த கைகள்' (1990) போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், சினிமா உலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த ராம்கி, 2013-ஆம் ஆண்டு 'மாசாணி' மற்றும் 'பிரியாணி' போன்ற படங்களில் துணை நடிகராக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். ராம்கியின் சொந்த வாழ்க்கை பற்றி பலருக்கு தெரியாத ஒரு விஷயம், அவர் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் என்ற கிராமத்தில்தான். அந்த ஊரிலேயே மிகவும் வசதியான குடும்பம் அவருடையது. ராம்கியின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்து, பின்னர் பணியிலிருந்து விலகி பஞ்சாயத்து தலைவராகவும் இருந்திருக்கிறார்.
ராம்கியின் குடும்பத்தில் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால், ராம்கிக்கு மட்டும் படிப்பு சரியாக வரவில்லை. இதனால், ராம்கியை அவரது தந்தை கண்டுகொள்ளாமல் விட்டதாக அவரே ஒருமுறை கூறியுள்ளார். படிப்பு ஆர்வம் இல்லாவிட்டாலும், ராம்கிக்கு சினிமா மீது தீவிர ஆர்வம் இருந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு, வீட்டை விட்டு வெளியேறிய ராம்கி, ஹீரோவாக நடித்த பிறகே தனது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவர் சொந்த வீட்டுக்கு செல்லவில்லை. ராம்கிக்கு ஆறு உடன்பிறப்புகள் என்றும், அவர்களில் சிலர் மருத்துவர்களாகவும், சகோதரர் ஒருவர் வெளிநாட்டிலும் செட்டிலாகி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/23/ramki-1-2025-09-23-17-19-37.jpg)
சங்கரநத்தம் கிராமத்தில் ராம்கியின் குடும்பத்திற்கு அரண்மனை போன்ற மிகப் பெரிய கல் வீடு ஒன்று இருந்திருக்கிறது. ஆனால், தற்போது அந்த வீடு இடிந்து சிதைந்து போய்விட்டது. அதேபோல, அவர்களுக்கு சொந்தமாக இருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களையும் விற்றுவிட்டு, ராம்கியின் குடும்பத்தினர் சொந்த ஊரை காலி செய்து, மதுரை, சென்னை மற்றும் வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/gsLSephz9759jAl1j3XR.jpg)
சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி நிரோஷாவுடன் சொந்த ஊருக்குச் சென்ற ராம்கி, கிராம மக்களை சந்தித்து பேசியுள்ளார். இப்போது ராம்கியின் குடும்பத்திற்கு சொந்தமான ஒரே சொத்து, அந்த கிராமத்தில் உள்ள இடிந்த அந்த வீடு மட்டும்தான். சென்னையில் வசிக்கும் ராம்கி பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை. எனினும், ஒரு குறிப்பிட்ட காலம் நடிக்காமல் இருந்தவர், தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் பிசியாக நடித்து வருகிறார். அவரது மனைவி நிரோஷா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us