scorecardresearch

பொன்மகள் வந்தாள் – வெண்பாவின் நீதியை நோக்கிய பயணம் : டுவிட்டராட்டிகளின் ரியாக்சன்

Ponmagal vandhal trailer : பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

ponmagal vandhal, jyotika, Surya jyotika, ponmagal vandhal trailer, amazon prime, ott, corona virus, lockdown, director jjfrederick, ponmagal vandhal trailer, parthirpan, bhagyaraj, 2D productions
ponmagal vandhal, jyotika, Surya jyotika, ponmagal vandhal trailer, amazon prime, ott, corona virus, lockdown, director jjfrederick, ponmagal vandhal trailer, parthirpan, bhagyaraj, 2D productions

ஜோதிகா வழக்கறிஞராக நடித்திருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம், வரும் 29ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். ஜேஜே ப்ரெட்ரிக் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் ஆர்.பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப்போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் அமேசான் பிரைமில் நேரடியாக படத்தை வெளியிட சூர்யா முடிவெடுத்தார். ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமேசானில் பிரைமில் படம் வெளியானால் சூர்யா, ஜோதிகா நடிக்கும் படங்களை திரையிடமாட்டோம் என்ற அளவுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி நடிகர் சூர்யா படத்தை அமேசான் பிரைமில் வெளியிட துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மே 29-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

டுவிட்டரில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ள நிலையில், டுவிட்டராட்டிகளின் கமெண்ட்களை இங்கு பார்ப்போம்

வெண்பாவின் நீதியை நோக்கிய பயணம் – நடிகர் சூர்யா

கடவுளுக்கு நன்றி – இயக்குனர் பிரடெரிக்

கடவுளுக்கே பெருமை – எடிட்டர் ரூபன்

தாமதம் என்றாலும் நீதி கிடைத்துள்ளது – சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா</strong>

வெண்பாவின் நீதிக்கான பயணம் – நடிகர் கார்த்தி</strong>

சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ponmagal vandhal jyotika surya jyotika ponmagal vandhal trailer amazon prime

Best of Express