Advertisment

ஐஸ்வர்யா ராய்-லயே நிக்கிறீங்களே..! சரத்குமாரை நேரில் கலாய்த்த பார்த்திபன்

நடிகர் சரத்குமார் மற்றும் பார்த்திபன் இருவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிக்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
ஐஸ்வர்யா ராய்-லயே நிக்கிறீங்களே..! சரத்குமாரை நேரில் கலாய்த்த பார்த்திபன்

தமிழர்களின் வரலாற்றை சற்று கற்பனையுடன் கூறியுள்ள பொன்னியின் செல்வன் நாவலுக்கு இன்றளவும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நாவலை திரைப்படமாக மாற்ற பல்வேறு இயக்குனர்கள் முயற்சித்து வந்த நிலையில், இந்த முயற்சியில் தற்போது இயக்குனர் மணிரத்னம் வெற்றி கண்டுள்ளார்.

Advertisment

லைகா நிறுவனத்துடன் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக தயாராகியுள்ளது.

இதன் மூலம் பாகம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு சில நெகடீவ் காமெண்ட்ஸ் வந்தாலும், 3 நாட்களில் படம் ரூ 200 வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படத்தின் 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படம் வெளியானது முதல் சமூகவலைதளங்கள் மற்றும் யூடியூப் தளத்தில் பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் வெளியான திரைப்படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர். மேலும் படம் தொடர்பான மீம்ஸ்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றனர்.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையார் மற்றும் சின்ன பழுவேட்டையார் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மற்றும் பார்த்திபன் இருவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிக்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் சரத்குமார் வருகைக்காக காத்திருக்கும் பார்த்திபன் அவர் வந்தவுடன் வணக்கம் அண்ணா என்று சொல்லி வரவேற்கிறார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பிறந்தவர் பெரியவர். அவருக்கு அடுத்து பிறந்தவர் சின்னவர். ஆனால் சின்னவன் நான் முதலில் வந்துவிட்டேன். நீங்கள் இப்போதுதான் வருகிறீகள் என்று பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் பேசுகிறார். அதன்பிறகு இருவரும் பொன்னியின் செல்வன் குறித்து பேசுகின்றனர்.

முதலில் பார்த்திபன் இந்த படத்தில் எத்தனை டேக் வாங்குனீங்க ன்று கேட்க, எல்லாம் பிரிப்பேர்டா இருந்ததால அவ்வளவா டேக் வாங்கல அதேபோல் டைலாக் மட்டும் படித்தால் போதும் இயக்குனர் என்ன எடுக்க வேண்டும் என்று பிரிப்பேர்டா இருந்துருக்காரு என்று கூறியுள்ளார் சரத்குமார்.

அடுத்து பார்த்திபன் தான் தூய தமிழில் பேசுவதாக இயக்குனரிடம் சொன்னபோது அவர் அதை வேண்டாம என்று கூறியதாக சொல்கிறார். டையில் குறுக்கிடும் சரத்குமார் படம் தொடங்கும்போதே நம்மை பார்த்த தூய தமிழில் தெரிஞ்ச இவர்களால் தான் பிரச்சினை என்று கூறியதாக சொல்கிறார். இருவரும் தங்களது அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர்.

இடையில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் பற்றி பேசுகின்றனர். அப்போது நான் எந்த ப்ரேம்லயும் உங்களை பார்க்கவே இல்லை. நீங்க என்ன காஸ்ட்யூம் போட்டீங்கனு தெரியாது எதுவுமே நமக்கு தெரியாது என்று பார்த்திபன் சொல்ல நீங்க பெரிய பழுவேட்டையாரா நடிக்க ஆசைப்பட்டீங்களா என்ற சரத்குமார் கேட்கிறார்.

அதற்கு பார்த்தின் இல்லை என்று சொன்னாலும், நீங்க சொல்றதா பார்த்தா எனக்கு அப்படித்தான் தெரியுது என்று சொல்கிறார். ஐஸ்வர்யா ராய் பார்த்தா எனக்கு புடிக்காத மாதிரி நடிக்கனும் அதுவே எனக்கு புடிக்காம இருந்துச்சு என்று பார்த்திபன் சொல்கிறார். மேலும் இந்த வேலையில் உங்கள் டெடிக்கேஷன் தான் உங்களின் பிரமாதமான அழகு என்று ஐஸ்வர்யா ராயிடம் சொன்னதாக பார்த்திபன் சொல்கிறார்.

அப்போது இடையில் சரத்குமார் குறுக்கிட, பார்த்திங்களா என்ன அடுத்த வார்த்தை பேச விடாமல் ஐஸ்வர்யா ராயிலே தங்கிட்டீங்க என்று சொல்கிறார். ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும்போது ஒரு காட்சியில் சரத் உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண தெரியும்ல என்று இயக்குனர் கேட்டதாக சரத்குமார் கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கேமராமேன் ரவி வர்மன் மற்றும் கலை இயக்குனர் தோட்டா தரணியி்ன் வேலைகளை குறித்து ஆச்சரியத்துடன் பேசிக்கொள்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து அவர்கள் பேசியது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment