Advertisment

இந்த நடிகைகள் என்னை போல் மாறுகிறார்கள்… பிக்பாஸ் பிரபலம் பதிவுக்கு பிரபல நடிகை பதிலடி

Actress Priya Anand comments on meera mithun’s insta video Tamil News: தமிழில் உள்ள முன்னணி ஹீரோயின்களில் சிலர் தனது முகத்தை காப்பி அடிக்கிறார்கள் என கூறியுள்ள பிக்பாஸ் மீரா மிதுனுக்கு வலுவான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த்.

author-image
WebDesk
New Update
Priya Anand latest Tamil News: actress priya Anand comments on meera mithun’s insta video

Bigg Boss tamil fame meera mithun Tamil News: 'பிக் பாஸ்' மீரா மிதுன் என்றாலே சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் என எல்லோருக்கும் தெரிந்தது தான். பிக் பாஸ் வீட்டில் இவர் இருந்த போது இயக்குநர் சேரன் தன்னை தகாத முறையில் தொட்டார் என பொய் புகார் கொடுத்திருந்தார். இதன்பிறகு நடிகர்கள் விஜய், சூர்யா என பல டாப் ஹீரோக்களை சமூக வலைதள பக்கங்கள் மூலம் சீண்டியிருந்தார். இதனால் கோபமடைந்த அந்த டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

Advertisment
publive-image

ஒருகட்டத்தில் இவர் எல்லைமீறி பதிவுகள் போட்டு வந்ததால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு நீக்கப்பட்டது. எனவே மீரா இன்ஸ்டாகிராமில் மட்டும் இருக்கிறார். மேலும் அவர் போடும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாத வகையில் வைத்திருக்கிறார்.

publive-image

தன்னை ஒரு சூப்பர்மாடல் என கூறிக்கொண்டு சுற்றித்திரியும் மீரா, தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார். இவரின் சமீபத்திய இன்ஸ்டா வீடியோவில் தமிழில் உள்ள முன்னணி ஹீரோயின்களில் சிலர் தன் முகத்தை காபி அடிக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் அவர்களின் பெயர்களயும் குறிப்பிட்டுள்ளார். இந்த பெயர் பட்டியலில் நயன்தாரா, த்ரிஷா, பிரியா ஆனந்த், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் உள்ளனர்.

publive-image

பொதுவாக இவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை பிரபலங்கள் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில், இந்த முறை நடிகை பிரியா ஆனந்த் மீரா மிதுனுக்கு நோஸ்கட் கொடுக்கும் விதமாக ஒரு விஷயம் செய்துள்ளார். அதோடு மீரா பேசிய வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாக்ராமில் போட்டு நக்கல் செய்தும் உள்ளார்.

publive-image
publive-image

மீரா மிதுன் மற்ற நடிகைகள் தனது முகம் போல பிளாஸ்டிக் சார்ஜரி செய்து மாற்றுகிறார்கள் என குற்றம்சாட்டி வந்த நிலையில், அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும், திட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Tamil Cinema Bigg Boss Tamil Bigg Boss Vijay Tv Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment