Advertisment

Bigg Boss 5 : சாப்பாட்டுக்காக கண்ணீர் விட்டு அழுத பிரியங்கா... ஆறுதல்படுத்திய அண்ணாச்சி

Priyanka cries for food in Bigg Boss House: பிக் பாஸ் வீட்டில் சாப்பாடு கேட்டு அழுத பிரியங்கா; ஆறுதல் கூறிய இமான் அண்ணாச்சி

author-image
WebDesk
New Update
Bigg Boss 5 : சாப்பாட்டுக்காக கண்ணீர் விட்டு அழுத பிரியங்கா... ஆறுதல்படுத்திய அண்ணாச்சி

பிக் பாஸ் வீட்டில் சாப்பாடு பற்றாக்குறையால் கண்ணீர் வடித்த பிரியங்காவை இமான் அண்ணாச்சி ஆறுதல் படுத்தியுள்ளார்.

Advertisment

பிக் பாஸ் வீடு பல்வேறு கட்டுப்பாடுகள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். உணவு விஷயத்திலும் அதே நிலை தான். போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் கூட அளவோடு தான் இருக்கும். இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்பதால் பற்றாக்குறை இருப்பது வழக்கம்தான். மேலும் சில நேரங்களில் போட்டியாளர்கள் டாஸ்க்கை வெற்றிகரமாக முடிப்பதைப் பொறுத்தே உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 5 ஆவது சீசனிலும் உணவு பற்றாக்குறை இருப்பதாக சொல்லி பிரியங்கா கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். தனக்கு சாப்பிட எதாவது வேண்டும் என சொல்லி அவர் பிக் பாஸிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பிரியங்கா பசியால்  அழ ஆரம்பிக்க, அவரை இமான் அண்ணாச்சி தான் ஆறுதல் படுத்தினார்.

publive-image

அதன் பின் ராஜு பிரியங்காவிற்காக ஆம்லெட் செய்து ஸ்பெஷலாக சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அதையும் தெரியாமல் கீழே தள்ளிவிட்டுவிட்டனர். அதை பார்த்து பிரியங்கா மேலும் ஷாக் ஆனார்.

மேலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் வீடியோ காலில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் உடன் அவர்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசினார்கள். அப்போது பிரியங்கா அவர்களிடம் தனக்கு சாப்பாடு எதாவது அனுப்பி வைக்க முடியுமா என கேட்டார்.

உணவு மீது பிரியங்காவுக்கு எப்போதும் தனி பிரியம் தான். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட, எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார் என அவரது நண்பர்களால் கலாய்க்கப்படுவார். இப்படி நன்றாக சாப்பிடும் பிரியங்காவிற்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் அவர் என்ன தான் செய்வார். பிரியங்கா இப்படி வருத்தத்துடன் சாப்பாடு கேட்டு வரும் நிலையில், இன்று கமல் வந்து என்ன சொல்லப்போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment