மேக்கப் இல்லாட்டியும் நான் அழகு… ரோஜா சீரியல் பிரியங்கா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Roja serial Actress Priyanka Nalkari’s viral photos Tamil News: துளி மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை ரோஜா சீரியல் பிரியங்கா வெளியிட்டுள்ள நிலையில், அவை தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Priyanka Nalkari Tamil News: சன் டிவியின் முன்னணி சீரியலாக 'ரோஜா' வலம் வருகிறது. இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா முதன் முதலில் அறிமுகமாகியது ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் தான்.
Advertisment
தொடர்ந்து நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்தார்.
தமிழில் 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார். பிறகு காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். தற்போது, ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். மேலும், ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், துளி மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.