லேடி சூப்பர் ஸ்டார் மீது தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு! என்ன முடிவெடுப்பார் நயன்தாரா?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா மீது தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். உயர்த்தியுள்ள சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை.

தமிழ்த் திரையுலகில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. 2005ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2005 முதல் கடந்த ஆண்டு வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. குறிப்பாக சந்திரமுகி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. 2013-ல் வெளியான ராஜா ராணி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுவரை நடிகை என்று அழைக்கப்பட்ட இவர், ரசிகர்கள் மத்தியில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார். திரையுலகில் ஏராளமான ரசிகர்களின் மனதைத் தனது அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர்.

சமீபத்தில் இயக்குநர் கோபி நாயனார் இயக்கத்தில், நயன்தாரா நடித்து வெளியான ‘அறம்’ திரைப்படம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமுகம் சார்ந்த பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிய இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நயன்தாராவின் மீது ரசிகர்களுக்கு மரியாதை கூடியது. இத்திரைப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் வெளியாகியுள்ளது. இவ்வாறாகத் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா, ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். தற்போது இந்தத் தொகையை 5 கோடியாக உயர்த்தியுள்ளார். இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் அவர் மீது குற்றச்சட்டி வருகின்றனர்.

இதில், “படத்துக்குப் படம் நயன்தாரா தனது சம்பள தொகையைக் கூட்டுகிறார். மேலும் அவர் தன்னுடன் 4 அல்லாது 5 உதவியாளர்களை அழைத்து வருகிறார். இதனால் அவர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளம் கொடுக்கும் நிலை உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு படத்திற்கு நயன்தாராவின் உதவியாளர்களுக்கு மட்டுமே ரூ. 50 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை செலவாகிறது. ஆகையால் இவர் தனது சம்பளத்தை குறைக்க வேண்டும். அத்துடன் நடிகர் சூர்யா, விஷால், கார்த்திக் போல் உதவியாளர்களுக்குத் தானே சம்பளம் கொடுத்தால் எங்களின் பாரம் குறையும்.” என்று கூறினர்.

ஒருபுறம் தயாரிப்பாளர்கள் இவ்வாறு கூறி வருகையில், ரசிகர் இதற்குக் கேள்வி எழுப்புகின்றனர். முன்னணியில் உள்ள ரஜினி, கமல் ஆகியோருக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கும்போது தரமான படங்களை அளிக்கும் நயன்தாராவிற்கு தாராளமாக 5 கோடி கொடுக்கலாம் என்கின்றனர் அவரின் தீவிர ரசிகர்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close