scorecardresearch

‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் நடித்துள்ளார்

Queen trailer Ramya Krishnan as Jayalalithaa - 'குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்-னு இல்லை' - ஜெயலலிதாவின் கதை சொல்லும் 'குயின்' டிரைலர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ள வெப்சீரிஸ் ‘குயின்’ டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.


ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த வெப்சீரிஸின் டீசர் வெளியானதையடுத்து, தற்போது டிரைலரும் வெளிவந்துள்ளது.


இதில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தின் பெயர் சக்தி ஷேசாஸ்த்ரி எனவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தின் பெயர் ஜி.எம்.ஆர் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.பிளேயரில் வரும் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது ‘குயின்’ வெப்சீரிஸ்.

‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Queen trailer ramya krishnan as jayalalithaa